முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவது அடிக்கடி நடப்பதுண்டு. அது மாதிரியான தருணங்களில் காயத்தின் நிலையை அறிந்து அதற்கேற்ற முதலுதவி மற்றும் சிகிச்சையை அளிப்பது அவசியமாகும்.

  • 16

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவது என்பது மிகவும் பொதுவானவை. இளம் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, தோராயமாக 44% பேர் தங்கள் தடகள வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் காயத்தால் பாதிக்கப்படுவார்கள். பெரியவர்களில் சுமார் 21% பேர் காயங்களால் பாதிக்கப்படுவர். அவ்வாரு ஏற்படும் விளையாட்டு காயங்கள் இரண்டு வகையாக பிரிக்கலாம், அதாவது, திடீரென ஏற்படும் காயம் அல்லது நீண்ட காலமாக இருந்துவரும் காயம்.

    MORE
    GALLERIES

  • 26

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    கடுமையான காயங்கள் என்றால் என்ன? (Acute injuries) : ACL (ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட்) ACL ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட், எனப்படும் முழங்கால் தசைநார் காயம் என்பது இளவயதுள்ள, சுறுசுறுப்பான விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான காயமாகும். ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்ட் காயங்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. சாதரணமாக, கிழிந்த தசை நாரை எடுத்து விட்டு நோயாளியின் முழங்காலின் இன்னொரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு தசை மாற்றி பொருத்தப்படுகிறது. இந்த காயத்திற்கு, பாரம்பரிய சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 36

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    மெனிஸ்கஸ்  : மெனிஸ்கஸ் என்பது குருத்தெலும்பு போன்ற ஒரு அமைப்பாகும். இது தொடை எலும்புக்கும் கால் முன்னெலும்புக்கு இடையில் பொருத்தப்பட்டு அதிர்ச்சியை தாங்க உதவும் ஒரு குஷன் போன்ற அமைப்பை வழங்குகிறது. ஆன்டிரியர் க்ரூஷியேட் லிகமன்டுக்கு பின்னால் ஏற்படும் இரண்டாவது பொதுவான முழங்கால் காயம் இதுவாகும். முழுமையான வார்ம்-அப்கள், ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல், போன்றவற்றின் மூலம், மெனிஸ்கஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    கணுக்கால் சுளுக்கு  : சுளுக்கு என்பது ஒரு தசைநார் நீட்சி அல்லது கிழிதல் ஆகும். அவை பொதுவாக கணுக்கால், முழங்கால், மணிக்கட்டு அல்லது கட்டைவிரலில் ஏற்படுகின்றன, இருப்பினும் கணுக்கால் சுளுக்கு மிகவும் பொதுவானது. நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு. வலுப்படுத்தும் பயிற்சிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணுக்காலை நெகிழ்வாகவும் வலுவாகவும் வைத்திருங்கள். நீங்கள் ஏதேனும் விளையாட்டில் ஈடுபட்டிருந்தால், கணுக்காலுக்கு கூடுதல் ஆதரவைப் பெற பாதிக்கப்பட்ட பகுதியை டேப் அப் செய்யவும். உங்களுக்கு பல சுளுக்குகள் இருந்தால் பிரேஸ் பயன்படுத்தவும். பிளைமெட்ரிக் பயிற்சி செய்யலாம், இந்த பிளைமெட்ரிக் என்பது மிக வேக இயக்கத்தின் போது நாம் செய்ய விரும்பும் சரியான நுட்பமாகும்.

    MORE
    GALLERIES

  • 56

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    தசை திரிபு Strained/pulled muscles : தசை திரிபு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் ஏற்படும் ஒரு வகை காயம் ஆகும்.தசை நரம்புகள் நீட்சி அடையும் போது அல்லது கிழியும் போது ஒரு நபருக்கு தசை திரிபு ஏற்படுவதாக கூறப்படுகிறது.பெரும்பாலான தசை திரிபுகள் மிதமாக இருக்கும், மற்றும் இதனால் தசை நரம்புகள் வலுவாகவும் சேதமடையாமலும் இருக்கும்.சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, தசை நார்கள் அதன் எல்லைகளுக்கு அப்பால் நீண்டு, தசை நார்களை கிழித்து விடுகின்றன. லேசான தசை திரிபுகள் உடல் பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இந்த முறையில் தசை வலிமை அடையும். கடுமையான தசை திரிபுகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்,அதைத் தொடர்ந்து உடல் பயிற்சி அளிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 66

    விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பற்றி தெரியாத உண்மைகளும்.. சிகிச்சை முறைகளும்..!

    புர்சிடிஸ் (Bursitis) : பர்சா என்பது சில முக்கிய மூட்டுகளில் உள்ள தசைநாண்களுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு திரவம் நிறைந்த பை ஆகும், இது தசைகளின் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையிலான உராய்வைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அவை பொதுவாக இத்தகைய உராய்வு சேதங்களுக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ளன. மணிக்கட்டுக்குள் வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஒரு வீக்க நிலை. பொதுவாக இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கணுக்கால் அல்லது முழங்கையில் ஏற்படலாம். உடற்பயிற்சியின் போது திடீர் அசைவுகளை தவிர்க்கவும். மேலும் எடை திடீரென அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

    MORE
    GALLERIES