முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத்துறை இணைந்து அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 17

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    யில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத்துறை இணைந்து அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாநில சுகாதாரத்துறை இணைந்து அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    2016-2018ம் ஆண்டுக்கான தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு அறிக்கையின்படி, “ சென்னையில் வசிக்கும் பெண்களில் ஒரு லட்சம் பேருக்கு 52 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. 2006-2011ம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 27.5 ஆக இருந்தது. இது கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று க்ரூட் இன்சிடன்ஸ் ரேட்(CIR) குறிப்பிடுகிறது. CIR என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட மக்கள்தொகையில் நிகழும் பாதிப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    அடையாறு புற்றுநோய் தடுப்பு மையத்தின் தொற்றுநோய் பிரிவு இணைப் பேராசிரியர் மருத்துவர் பி. சம்பத் கூறுகையில் கடந்த 2016-18 கணக்குப்படி சென்னை பெண்களிடையே மார்பகப்புற்றுநோய்களுக்கான விகிதம் 83.4 என்ற அளவிலும், அனைத்து புற்று நோய்களுக்கான விகிதம் 69.6 ஆகவும் இருந்துள்ளது. அதே போல் 2006-11 இல் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 14.3 ஆகவும், கருப்பை புற்றுநோய் விகிதம் 6.1 ஆகவும் ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    புற்றுநோய் பதிவேடு புள்ளிவிவரங்கள்படி, கருப்பைவாய் புற்றுநோய் 11.5 ஆகக் குறைந்தது. ஆனால், கருப்பைப்புற்றுநோய் 7.5 ஆகவும், ஓவரி 9.6 ஆகவும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகர்புறங்களில் அதிகரி்த்து வருகிறது. பெருநகரங்களில் உள்ள பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் அதிகரித்துவருவது குறித்து சிறப்பு நிபுணத்துவ ஆய்வு அவசியம். தொடர் பரிசோதனை முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெண்கள் மத்தியில் அதிகப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்

    MORE
    GALLERIES

  • 67

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணை இயக்குநர் மருத்துவர் ஆர் சுவாமிநாதன் கூறுகையில் “ பெண்கள் மார்கப்புற்றுநோய் இருப்பது தெரிந்து தொடக்கத்திலேயே சிகிச்சைக்கு அதாவது முதல் மற்றும் 2ம் கட்டத்தில் வந்துவிடுவது ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால், விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது.நகர்ப்புறங்களில் பெண்களுக்கு மார்கப்புற்றுநோய் அதிகரித்து வருகிறது. பெண்கள் சுயமாகவே மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குகூட அடிக்கடி பரிசோதனை அவசியம். ஆனால், பரிசோதனை அடிக்கடி பெண்கள் செய்வதில்லை. அவர்களுக்கு அறிகுறி தெரிந்தால் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 77

    சென்னையில் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு..! அதிர்ச்சி தகவல்..

    அரசு கஸ்தூரிபாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு நிபுணர் மருத்துவர் சி சுமதி கூறுகையில் “உடற்பயிற்சிஇல்லாமல் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை, உடல்பருமன், நீரிழிவு நோய், குடும்பப் பாரம்பரியம் ஆகியவை பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரக் காரணமாகும். ஆதலால், பெண்கள் உடல்பருமனாவதைத் தடுக்கவேண்டும். மாதவிடாய் காலத்துக்குப்பின் பெண்கள் சுயமாக மார்கப்பரிசோதனை செய்ய வேண்டும் கல்லூரிக் காலத்தில் இருந்தே இந்தப் பழக்கம் வர வேண்டும்”எனத் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES