WHO-வின் இந்த தரவுகள் கவலையளிக்க கூடியவையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ரஞ்சன் பட்டாச்சார்யா, நம் மன ஆரோக்கியத்தை பேண சுய-கவனிப்பு செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை ஷேர் செய்து உள்ளார். மேலும் ஒருவர் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வாழ்க்கையில் பாசிட்டிவாக இருப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. வாழ்க்கையில் திருப்தி உணர்வை பெற மற்றும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள பொதுவாக இன்னும் நிறைய செய்ய வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நிபுணர் பகிர்ந்துள்ள டிப்ஸ்கள் இங்கே.
இதற்கிடையே Fittr and INFS இணை நிறுவனரும், இயக்குனருமான பாலகிருஷ்ணா ரெட்டி பேசுகையில், சுய பாதுகாப்பு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல, ஆனால் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க அவசியமான ஒன்று. உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், சுய-கவனிப்பை பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக, நிதானமாக சமாளிக்க உதவும். ஒரு பயனுள்ள self-care ரொட்டீனை வழக்கத்தை உருவாக்க படிப்படியான நடைமுறைகளை உருவாக்குவது அவசியம். எல்லாவற்றையும் சரியாக செய்ய உங்கள் மீது நீங்களே அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள் என்கிறார்.