பொதுவாக தடுப்பூசிகள் குறிப்பிட்ட நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், ஆரோக்கிய உணவுகள், வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கிய எடை, போதுமான தூக்கம், புகை மற்றும் மதுவை தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆயுர்வேத முறையானது நோய்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக பிரபல ஆயுர்வேத நிபுணர் சைதாலி கூறியுள்ளார். மேலும் இவர் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகள் பற்றியும் ஷேர் செய்திருக்கிறார். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 எளிய வழிகள் இங்கே:
ஆயுர்வேத முறைப்படி பருவகால விதிகளை பின்பற்றவும்: பருவக்காலத்திற்கு ஏற்ப உணவுகளை சாப்பிடும் ஆயுர்வேத முறை ரிது சார்யா என குறிப்பிடப்படுகிறது. இந்த முறைப்படி 6 வகையான பருவங்கள் உள்ளன, ஒவ்வொரு பருவத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் வெவ்வேறு உணவு வகைகளை டயட்டில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவர் அதிகம் வேலை செய்யாவிட்டாலும் அல்லது வியர்க்கவில்லையென்றாலும் கூட சுவாசம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது போன்றவற்றின் மூலம் ஒருவர் தனது உடலில் இருக்கும் நீரை இழக்க நேரிடும். எனவே உங்களது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு மற்றும் வாழ்க்கை முறைளில் மாற்றம் செய்வது சிறந்த பலன்களை அளிக்கும்.