முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

உடல் எடையை குறைக்க விரும்பும் தைராய்டு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்,

  • 18

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது தைராய்டு. மனிதர்களின் கழுத்தின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் ஒரு சுரப்பி தான் இது. இதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவு சீராக இல்லையென்றால், உடலில் பல மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும். குறிப்பாக மாறுபட்ட வளர்சிதை மாற்றத்தால், எடை அதிகரிப்பு, மூட்டு வலி, முடி உதிர்தல், இதய நோய்கள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்ளுக்கு மாதவிடாய் முறையாக வராமல் பிரச்சனையைச் சந்திக்கின்றர். இதனால் கருவுறுதலிலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதை ஹைப்போ தைராய்டிசம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    பொதுவாக ஹைப்போ தைராய்டிசம் எந்த வயதினரையும் பாதிக்கலாம். உடல் சோர்வு, குளிர், மலச்சிக்கல், வறண்ட சருமம், அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு, மூட்டு வலி, மனச்சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் கடினமாக விஷயம். ஆனால் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நிச்சயம் குணப்படுத்த முடியலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தைராய்டைக் குணப்படுத்தக்கூடிய உணவு முறைகள் சில..

    MORE
    GALLERIES

  • 38

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    நட்ஸ் : தைராய்டு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களை நீங்கள் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். இது செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதோடு சியா மற்றும் பூசணி விதைகளையும் நீங்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் : புரத சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இவற்றை உங்களுடைய உணவு முறையில் நீங்கள் சேர்த்துக்கொள்ளும் போது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 58

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    முட்டைகள் : உடல் எடையை குறைக்க விரும்பும் தைராய்டு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களின் உடலை துத்தநாகம், செலினியம் மற்றும் புரத சத்துக்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இது எடை இழப்பு மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    காய்கறிகள் : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால்அதற்கு மாற்றாக தைராய்டு நோயாளிகளுக்கு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி மற்றும் மிளகுத்தூள் போன்றவற்றை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    மேலும் உங்களது உடலில் ஹார்மோன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் காஃபின் இல்லாத பானங்களை நீங்கள் உட்கொள்ளலாம். கூடுதலாக, ஆரோக்கியமான உணவுடன், நோயாளிகள் யோகா போன்ற உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது நல்லது. இது அவர்களின் நாளமில்லா அமைப்பைத் தூண்டுகிறது மற்றும் அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    ஹைப்போ தைராய்டிசத்தால் இவ்வளவு பாதிப்புகளா? கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

    இந்த நோய்க்கு நீங்கள் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் பட்சத்தில், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதையடுத்து இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற உங்கள் உடலை கடுமையாக பாதிக்கும் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் நீரிழிவு, கீழ்வாதம் மற்றும் இரத்த சோகை போன்ற பிற நோய்களின் தொடக்கத்திற்கு தைராய்டு வழிவகுக்கும் என்பதையும் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, ஆரம்பகால நோயறிதல் மற்றும் நிலைமையைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    MORE
    GALLERIES