முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

பிசிஓஎஸ் கோளாறு இருக்கும் போது உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

 • 16

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic ovary syndrome - PCOS) என்பது குழந்தை பெறும் வயதில் இருக்கும் 10 பெண்களில் 2 பேரை பாதிக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. PCOS உள்ள பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. PCOS என்பது இனப்பெருக்க ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் ஏற்படுகிறது. ஹார்மோன்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வு கருப்பையில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதற்கென்று தனி சிகிச்சைகள் இல்லாத நிலையில் PCOS-ஐ கட்டுப்படுத்தவும் மற்றும் மற்றும் நிர்வகிக்கவும் உதவுவது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான உடல் எடையும் தான்.

  MORE
  GALLERIES

 • 26

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  எனினும் பிசிஓஎஸ் கோளாறு இருக்கும் போது உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிசிஓஎஸ் உடன் போராடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளாக எடை அதிகரிப்பு அல்லது எடை எளிதில் குறையாமல் இருப்பது உள்ளிட்டவை இருக்கின்றன. PCOS இருப்பதால் தீவிர எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டாலும், எடை குறைவது மிக மெதுவாக தான் இருக்கும். எனவே பிசிஓஎஸ் இருக்கும் போது சரியான முறையில் எடையை குறைக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  ஃபைபர் : அதிக ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், கொழுப்பை குறைக்கவும் உதவும். ஃபைபர் நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு உதவும் நேரத்தில், பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஃபைபர் சத்து உணவுகளை எடுத்து கொள்வதுமுழுமையாக உணர உதவி அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்துகிறது. பழங்கள், காய்கறிகள் முதல் ஃபைபர் நிறைந்த தானியங்கள் வரை தினசரி உணவில் சேர்த்து கொள்வது எடையை இழக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 46

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  புரோட்டின் உணவுகள்: பிற அனைத்து ஊட்டச்சத்துக்களை விட பொதுவாக புரதம் தான் நாம் அனைவரும் குறைவான அளவு எடுத்து கொள்கிறோம். எடை இழப்புக்கு உதவும் மிக முக்கிய ஊட்டச்சத்தாக புரோட்டின் இருக்கிறது. எனவே PCOS இருக்கும் பெண்கள் தங்கள் உணவில் தினசரி தவறாமல் புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து வருவது அவர்களின் எடை உயர்வை கட்டுப்படுத்தி, குறைக்க உதவுகிறது. மிக முக்கியமாக ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைக்கும். இவை தவிர கொழுப்புகள் மற்றும் நல்ல தரமான கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  சர்க்கரையை குறைக்க வேண்டும்:  எடை குறைப்பு முயற்சிக்கு சர்க்கரை மோசமான எதிரியாக இருக்க கூடும். எனவே சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆடட் சர்க்கரையை குறைக்க முயற்சிக்க வேண்டும். . வெள்ளை சர்க்கரைக்கு பதில் தேன், வெல்லம் உள்ளிட்ட ஆரோக்கியமான பொருளை பயன்படுத்தலாம். டயட்டில் அதிக பழங்களை சேர்த்து கொள்வதன் மூலம் இயற்கையான சர்க்கரையை பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள்...

  வொர்க் அவுட்களில் கவனம்: உயர் தீவிர இடைவெளி பயிற்சி மற்றும் தசை பயிற்சி போன்ற வொர்க் அவுட்கள் எடையை குறைக்க மற்றும் இன்சுலின் எதிர்ப்பை எதிர்த்து போராடும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES