தொண்டை கரகரப்பு : ஒரு எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வையுங்கள். தண்ணீர் சூடு குறைந்ததும் வடிகட்டி அதில் 2 tbsp கிளிசரின் சேர்த்து கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து 1 tbsp தேன் கலக்கவேண்டும். பின் இந்தக் கலவை நீரை தேவைப்படும் போதெல்லாம் ஒரு சிப் குடிக்கலாம். இதனால் தொண்டை வலி, சளி குறையும் என லிவ்ஸ்ட்ராங் ஆன்லைன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
தூக்கமின்மை : சளி , இருமல் இருந்தாலே தூங்குவது கடினம்தான். எனவே இந்த முறையை பின்பற்ற தூக்கம் வரலாம். முதலில் ரம் அல்லது ஸ்கார்ட்ச் இருந்தால் அதோடு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். பின் ஏதாவதொரு டீ பேக் அதில் போடுங்கள். பின் சூடான தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து குடியுங்கள். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். சளி, இருமல், தொண்டை வலி தொல்லை இருக்காது.