இன்றைய பரபரப்பான லைஃப் ஸ்டைலில் மன அமைதிக்காக பலரும் தியானம் மற்றும் யோகாவை நாடிச் செல்கின்றனர். ‘என் டென்ஷனை குறைக்க இதெல்லாம் போதாது?’ என ஓவர் பரபரப்புடன் சுற்றும் நபர்கள் அரோமா தெரபி எனப்படும் நறுமண சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். ஏனென்றால் இது ஒட்டுமொத்த உடலையும் ரிலாக்ஸ் செய்து, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை குறைக்க உதவுகிறது. மேலும் அரோமா தெரபியின் மூலம் உடல் அழகை பொலிவாக்க, தடுமாறும் மனதை அமைதிப்படுத்த, உடலில் அசுத்தத்தை நீக்கி இரத்தத்தை சீராக்க முடியும்.
அரோமாதெரபியின் நன்மைகள் என்ன?
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கும்:
அரோமாதெரபி மன அழுத்தம் அல்லது பதற்றத்தை போக்க உதவும். மனதை அமைதிப்படுத்தவும், ஆழமாக சுவாசிக்கவும் மற்றும் ஓய்வெடுக்கவும் இது உதவுகிறது. குறிப்பாக நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது.