க்காலத்தில் தொற்று அல்லது பருவ மாற்றம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் வருவது இயல்பு. இந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவு. தீவிர காய்ச்சலுடன், சளி, இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் சென்று கொரோனா பரிசோதனை பெற்றுக்கொள்வது நல்லது. சாதாரண தொற்றுகளும் தாக்காமல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?
உணவே மருந்து : நம் உடலுக்குத் தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் சாப்பிடும் காய்கறி, பழங்களிலேயே இருக்கின்றன. எனவே உங்கள் டயட்டை சற்று ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி, ஸிங்க் மற்றும் ஐயர்ன் ஆகிய சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் விட்டமின் டி யும் இன்றியமையாத ஒன்று, எனவே இவற்றை சரியாக பின்பற்றினாலே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பயமே வேண்டாம்.
தூக்கம் : எந்த வேலையாக இருந்தாலும் தூக்கத்தை மட்டும் சமரசம் செய்யாதீர்கள். உங்கள் உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க இரவுத் தூக்கம் மிக மிக அவசியம். உடல் தன் வேலையை சீராக செய்து முடித்தால்தான் மறுநாள் காலை உற்சாகமாக இருக்க முடியும். இல்லையெனில் விடுபட்ட வேலையினால் சோர்வடைந்துவிடும். எனவே சீக்கிரம் தூங்கி எழுதல் அவசியம்.