முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

கோடை காலத்தின் துவக்கத்திலேயே, வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. கோடைகாலத்தில் உங்கள் கண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

  • 111

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    கோடைக்காலம் துவங்கி விட்டது. கோடையில் ஏற்படும் அதீத வெப்பத்தால், கண்கள் மற்றும் சருமங்கள் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால், அதிகமான சூரிய கதிரை கண்கள் மற்றும் தோல் தாங்குவதில்லை. எனவே, உங்கள் கண் பராமரிப்பு அல்லது உங்கள் கண்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது. புற ஊதா கதிர்வீச்சிலிருந்து உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான சில உதவிக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 211

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    சன்கிளாஸ் பயன்படுத்தவும் : சூரிய ஒளியின் தாக்கம் அதிகம் இருக்கும் வேலையில் நீங்கள் வெளியே செல்லும் போது சன்கிளாஸ் (அ) கண்ணாடி பயன்படுத்துவது நல்லது. இது சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதா கதிர்களிடம் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவும். எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சன்கிளாஸ் அணிவது மிகவும் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 311

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    நீச்சலின் போது கண்ணாடி : வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க நாம் சில சமயங்களில் குளம் அல்லது நீச்சல் குளங்களுக்கு குளிக்க செல்வோம். அது நல்ல விஷயம் தான், ஆனால், நீச்சலின் போது உங்கள் கண்களை பாதுகாக்க நீச்சல் கண்ணாடிகளை பயன்படுத்த மறவாதீர்கள். ஏனெனில், நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் உங்கள் கண்களை பாதிக்கும்.

    MORE
    GALLERIES

  • 411

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    கைகளால் கண்களை தேய்க்க வேண்டாம் : அசுத்தமாற்ற கைகளால் உங்கள் கண்களை துடைப்பது தேவையற்ற அலர்ஜிக்கு வழிவகுக்கும். எனவே, முடிந்தவரை உங்கள் கைகளை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது கண்களை துடைக்கும் முன் கைகள் தூய்மையாக உள்ளதா என சோதித்துக்கொள்ளுங்கள். வெறும் கைகளை கொடு கண்களை துடைக்காமல், கைக்குட்டையை பயன்படுத்தவும்.

    MORE
    GALLERIES

  • 511

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    தொப்பி அல்லது ஷால்களை பயன்படுத்தவும் : சூரியனின் கடும் கதிர்வீச்சில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க, நிழல் தரக்கூடிய பெரிய தொப்பி அல்லது தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க உதவும் முக்காடு துணியை பயன்படுத்துங்கள்.

    MORE
    GALLERIES

  • 611

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    புகைபிடித்தலை தவிர்க்கவும் : புகைபிடிக்கையில் வெளியிடப்படும் புகை உங்கள் கண்களில் பட்டு, கண்களின் வறட்சிக்கு வழி வகுக்கிறது. மேலும் இந்த புகை கண்புரை, மஸ்குலர் சிதைவு போன்ற பல கண் சார்ந்த நோய்களுக்கான ஆபத்தை உண்டாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 711

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    உச்சி வெயிலைத் தவிர்க்கவும் : முடிந்தவரை, சூரியனின் தாக்கம் அதிகம் இருக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்துவிடுங்கள். தவிர்க்கமுடியாத பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருந்தால், அதற்கான முன்னெச்சரிக்கை திட்டத்துடன் வெளியே செல்லுங்கள். அதாவது, குடைகளை கையில் எடுத்து செல்வது, ஆட்டோக்களில் பயணிப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 811

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    சன்ஸ்கிரீன் லோஷன் : கோடை வெயிலின் கடுமையான வெப்பத்தை சமாளிக்க சன்ஸ்கிரீன் லோஷனைப் நாம் பயன்படுத்துவது வழக்கம். இந்த சன்ஸ்கிரீன் லோஷன்கள் கண்களுக்கு எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. எனவே, சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தும் போது கண் இமைகளை தவிர்க்கவும். எனவே, வெளியில் செல்லும் போது உங்கள் பையில் சன்ஸ்கிரீன் லோஷன் இருப்பதை உறுதி செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 911

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    கண்களை உலர விடாதீர்கள் : கோடையின் போது வீசும் வெப்ப காற்று உங்கள் கண்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி வறண்டு போக வைக்கிறது. கண்கள் வறண்டுபோவதால் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் எழுகிறது. எனவே, கண்களை முழுவதுமாக மறைக்கும் வகையில் கண்ணாடி அணிவது நல்லது. நன்றாக தண்ணீர் குடிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 1011

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    கூடுதல் கண்ணாடி அவசியம் : எதிர்பாராத விதமாக உங்கள் சன்கிளாஸ் சேதமடைந்துவிட்டால் (அ) உடைந்துவிட்டால், அதற்கு மாற்றாய் ‘இரண்டாவது ஜோடி கண்ணாடி’ ஒன்றை கையில் வைத்திருப்பது அவசியம். கோடையின் தாக்கத்தை சமாளிக்க ஒரு ஜோடி கண்ணாடி போதாது. எனவே, கையில் கூடுதல் கண்ணாடி அல்லது குடை இருப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 1111

    கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!

    ஆரோக்கியமான உணவு : கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். தக்காளி, சீமை சுரைக்காய், எலுமிச்சசை, முலாம்பழம் மற்றும் பீச் போன்றவற்றை எடுத்துக்கொளவது நல்லது. இவற்றில், உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் கண்களுக்கும் நன்மை பயக்கும். இது தவிர அதிகமாக தண்ணீர் பருகவும். நீரிழப்பு கண் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது மங்கலான பார்வை மற்றும் மங்கலான பார்வை தலைவலிக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES