

வீட்டிலேயே முடங்கியிருப்பதாலும், வழக்கத்தை விட கூடுதலான நேரம் வீட்டில் அலுவகப் பணி செய்வதாலும் கண் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதேபோல் கொரோனா வைரஸ் பரவல் என்பது கண் , மூக்கு, வாய் வழியாகவே பரவுவதால் கண்களையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது அவசியம். எப்படி என்று பார்க்கலாம்.


பாதுகாப்பு : கொரோனா வைரஸை தவிர்க்க மாஸ்க் அணிவது மட்டும் அவசியம் அல்ல. முகத்தை அடிக்கடி தொடாமல் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியே செல்லும்போது சானிடைஸர் பயன்படுத்த வேண்டு. வெளியே சென்றால் எங்கும், எதன் மீதும் கை வைக்காமல் இருப்பதும் அவசியம்.


வீட்டுக் குறிப்பு : கண்களில் வீக்கம், கண்களில் தண்ணீர் கசிதல் போன்ற அறிகுறிகளும் கொரொனா அறிகுறிகளாக கூறப்படுகிறது. எனவே கண்களை ஆரோக்கியமாகவும், ஃப்ரெஷாகவும் வைத்துக்கொள்ள சில வீட்டுக் குறிப்புகளை செய்யலாம். அதில் எளிமையான வழி வெள்ளரிக்காயை கண்களில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுப்பதுதான்..!


மற்ற ஆபத்துகள் : அதிக நேரம் திரைகளை பார்ப்பதால் கண்களின் நீர் வற்றுதல், கண்கள் மங்கலாக தெரிதல் , கண் தொற்று போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். எனவே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.


உணவு : கண் பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் சி, ஏ போன்றவை அதிகம் சாப்பிடுங்கள். கொய்யா பழம், பெரிய நெல்லிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, கீரை வகைகள், காய்கறிகள், மீன், முட்டை , நட்ஸ் போன்றவை சாப்பிடலாம்.