

பற்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம்முடைய புன்னகைக்கு அழகு சேர்ப்பதும் பற்கள்தான். எனவே அதை முறையாக பராமரித்தாலே பற்கள் சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் பல் சொத்தையை ஆரம்பத்திலேயே தடுக்க என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.


பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் மிருதுவாக இருத்தல் நல்லது. கடினமான பிரஷுகள் ஈறுகளை சேதப்படுத்தும்.


காஃபி, டீ போன்ற சூடான பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் , ஜூஸ் போன்ற குளுர்ச்சியான பானங்களையும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.


மாவு வகை உணவு, ஸ்வீட், சாக்லெட் , மிட்டாய் போன்றவற்றை சாப்பிட்டால் உடனே வாயை கொப்பளித்து துப்புங்கள்.


வெற்றிலைப்பாக்கு, பான் மசாலாக்கள், புகைப்பிடித்தல் , மது போன்றவை பற்களை கடுமையாக சேதப்படுத்தும். எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது.


குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின்பு பற்களின் ஈறுகளை சுற்றி துடைத்துவிடுங்கள். பற்களின் உறுதிக்கு கேரட், பீட்ரூட், வெள்ளரி போன்ற காய்கறிகளை கொடுக்கலாம்.


பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விட்டமின் சி, விட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.


6 மாதங்களுக்கு ஒரு முறையேனும் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பற்சொத்தை இருக்குமோ என சந்தேகித்தால் உடனே செல்லுங்கள்.