முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

Procrastinating : தினசரி வாழ்க்கையில் பல காரியங்களை அப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது உண்டு. அப்படி தான் பெரும்பாலானவர்கள் பின் தங்கி விடுகின்றனர். இந்த பழக்கத்தை எப்படி எதிர்கொண்டு அதிலிருந்து விடுபடுவது என்று பார்ப்போம்.

 • 17

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று செய்யும் வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே போவது போடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இதன் பெயர் procrastination. இது ஒரு நேர மேலாண்மை குறைபாடு மற்றும் இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, அது மட்டுமில்லாமல் தன்னுடைய திறமை போதவில்லை என்று பல விதமான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம் ஏற்படும் போது, அதை எதிர்கொள்ள சில நேரங்களில் எதுவுமே செய்யாமல் அமைதியாக அப்படியே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, நம்முடைய எல்லா வேலைகளையும் தாமதப்படுத்தும் நிலை தான் procrastination. இதை எப்படிக் எதிர்கொள்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  உங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளவும்: நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலையை தள்ளிப் போட வேண்டும் என்ற நிலையை உடைப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவால், அதை செய்து முடிப்பது தான். ஆனால், அதை செய்து முடித்தாலே நீங்களும் தள்ளிப்போடாமல், அது நிறைவேறிவிடும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 47

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  உங்கள் இலக்குகளை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் (action plan) என்று திட்டமிடுங்கள்: என்ன செய்ய வேண்டும் என்று நிர்ணயித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். அது மட்டுமில்லாமல், தினசரி செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள். எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், எது முக்கியம் என்ற அடிப்படையில் செய்ய வேண்டும். இன்று என்ன செய்ய வேண்டும், நாளை என்ன செய்ய வேண்டும், இரண்டு நாளில் என்ன முடிக்க வேண்டும், ஒரு வாரத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டு வைத்துக் கொண்டால், தள்ளிப் போடுவதை தவிர்க்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 57

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  தயாராகாமல் எதையும் தொடங்க வேண்டாம்: நீங்கள் தயாராக இல்லாமல், எந்த விஷயத்தையும் தொடங்க வேண்டாம். எனவே, நீங்கள் முன்னேற்பாடுகளை செய்து விட்டு தான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், எதுவும் உங்கள் கவனத்தை சிதற விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிப்படை விஷயங்களை தயாராக வைத்து, நீங்கள் செய்து முடிக்க வேண்டியதை தடங்கல் இல்லாமல் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  பெரிய அல்லது நீண்ட நேரம் எடுக்கும் வேலையை செய்யத் தயங்காதீர்கள்: ஒரு சிலர், இந்த வேலை செய்து முடிக்க நீண்ட நேரம் எடுக்கும், இது பெரிதாக இருக்கிறது என்னால் முடியாது என்று தயக்கம் காட்டுவார்கள். பெரிய வேலைகளை சிறிய பகுதிகளாக பிரித்து, எளிதாக செய்து முடிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடித்தாலும், ஒரு பகுதி வேலை முடிந்தது என்ற திருப்தி கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  ‘அப்புறம் பாத்துக்கலாம்’ என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப் போடுகிறீர்களா..? இது உங்களுக்காக...

  உங்களுக்கு நீங்களே பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்: சின்ன சின்ன பரிசுகள் உங்களை ஊக்குவிக்கும். எல்லாரும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் விரும்புவார்கள். அதை நீங்களே உங்களுக்கு கொடுத்துக் கொள்ளலாம். ஒரு வேலையை முடித்து விட்டு, உங்களுக்கு பிடித்தவற்றை வாங்கலாம், வெளியில் செல்லலாம், அல்லது நீங்கள் விரும்பும் வேலையை செய்யலாம்.

  MORE
  GALLERIES