உலக சுகாதார அமைப்பின்படி, உலகளவில் சுமார் 219 மில்லியன் மக்களுக்கு மலேரியா நோய் ஏற்படுத்துகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை இந்நோய் ஏற்படுத்துகிறது. மறுபுறம், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 96 மில்லியன் மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர்; 40 ஆயிரம் இறப்புகளும் பதிவாவதாக கூறப்படுகிறது. சரி, கொசுக்கள் நம்மை கடிக்காமல் தடுக்க உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
மஸ்கிட்டோ ரிபெல்லன்ட் பயன்படுத்துங்கள்: கொசு கடிப்பதைத் தவிர்க்க வீட்டில் இன்செக்ட் ஸ்ப்ரே (insect spray) பயன்படுத்தலாம். தீங்கு விளைவிக்கும் விளைவுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். அதிகமாக பயன்படுத்துவது நல்லதல்ல. கொசுக்களை இயற்கையாக விரட்ட, கொசு விரட்டும் தாவரங்களான எலுமிச்சை தைலம், துளசி, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். உடலில் எசென்சியல் ஆயில்களை தேய்த்தல் மற்றும் டிஃப்பியூசர்களை பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும். புதினா, எலுமிச்சை, துளசி மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகும்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்: தோட்டத்தில் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்க விடாதீர்கள். தேவையில்லாமல் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க பாத்திரங்கள், பானைகள், பக்கெட்களை தலைகீழாக கவிழ்த்து வைக்கவும். மேலும், தேவையில்லாத நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். இப்படி செய்தால், தேவையின்றி கொசுக்கள் உங்கள் வீட்டை முகாமிடாது