Home » Photogallery » Health
1/ 6


பெண்களைத்தாக்கும் புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்றுநோய்தான் முதல் இடத்தில் உள்ளது. 30 வயதைக் கடக்கும் பெண்களை அதிகமாகத் தாக்கும் இந்த புற்றுநோயை தவிர்க்க பெண்கள் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இதனால் மார்பகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
2/ 6


ஆரோக்கியமான உடல் எடை : உடல் பருமன், உடல் எடை அதிகரித்தல் புற்றுநோய்க்கான காரணமாக உள்ளது. எனவே உங்கள் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ற அளவில் உடல் எடையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
3/ 6


உடற்பயிற்சி : தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுவரை இல்லை என்றாலும் இனியாவது திட்டமிடுங்கள்.
4/ 6


தீயபழக்கங்கள் : மது, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிடுதல் நல்லது. இவை புற்றுநோய் தீவிரத்தை அதிகரிக்கும்.