இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் தற்போது தொடங்கியுள்ளது அமைந்துள்ளது மற்றும் வழக்கத்தை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக பல நோய்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கோடை காலத்தில் மிக வேகமாக பரவுவதால் சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
கோடை காலத்தில் நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுவதால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தோல் எரிதல், தோல் அழற்சி மற்றும் கட்டிகள், நீர்க்கடுப்பு போன்றவற்றை கோடை கால நோய்கள் என்பதால் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள். மேலும், மார்ச் மாதத்தில் COVID-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், கூடுதல் கவனம் அவசியம்.
தூக்கம்: தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது இந்த கோடையில் ஆரோக்கியமாக இருக்க உதவும். தூக்கமின்மை பசி, இரத்த சர்க்கரை, நோய் மற்றும் சோர்வு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரவில் சரியாக தூங்க வேண்டும்,இதற்கு உங்கள் படுக்கை அறை இருட்டாக இருக்க வேண்டும், தூங்குவதற்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்போன், செல்போன், கணினி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
நீரேற்றமாக இருங்கள்: நீரேற்றத்துடன் இருப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். இது கோடை கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற மற்றும் பசியைக் கட்டுப்படுத்தவும் சரியான வழியாகும். தினமும் பழச்சாறு அருந்துங்கள். அல்லது வெள்ளரிகாய், எலுமிச்சை துண்டுகளை வெட்டி தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரை அருந்தி வாருங்கள்.
சர்க்கரையை தவிர்த்து விடுங்கள் : வெள்ளை சர்க்கரையில் அதிக ரசாயனங்கள் சேர்ப்பதால் முடிந்தவரை அவற்றை தவிர்த்து விடுங்கள். தினமும் ஆறு டீஸ்பூன் குறைவான அளவே சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். அதற்கு மேலே சேர்த்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இனிப்பு சுவை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.
சுறுசுறுப்பாக இருங்கள்: கோடை வெயில் என வீட்டிலேயே தங்குவதை தவிர்த்து விடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருங்கள். அதுபோல காலை, மாலை நேரத்தில் வெளியே சென்று வாருங்கள். மக்கள் வெளிப்புற பகுதியில் இருக்கும் போது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மேம்படும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வெளியில் சென்று வேற சிறிது நேரம் ஒதுக்குங்கள்.