நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் நிர்வகிக்கும் கிங் மாஸ்டர் போல உள்ள மூளையை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமாக எண்ணற்ற பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு நாளும் சில எளிய பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் மூளையின் செயல்பாடு வேகத்தை அதிகரிப்பதுடன், அதன் செயல்திறனை மேம்படுத்த முடியும். மனதின் நிம்மதி கெட்டால், படிப்படியாக உடல் நலனிலும் அது எதிரொலிக்கும். ஆகவே, மன நலனை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.