

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கை தள்ளி வைக்க முடியுமா? என்று கேட்டால் , மருத்துவ ரீதியாக, ஆம், மாத்திரைகள் உள்ளன என ஏராளமான பெண்கள் கூறுவார்கள். திருமணம், பார்ட்டிக்கு செல்ல வேண்டும், ஊருக்கு செல்ல வேண்டும், பண்டிகை காலங்கள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நாட்களில் மாதவிடாயை தள்ளிப்போட நினைப்பார்கள்.


இளம்பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை செய்யும் மிகப்பெரிய தவறு மாத்திரைகள் மூலம் இயற்கையாக வரும் மாதவிடாய் சுழற்சியை தடுத்து நிறுத்துவதுதான். மாத்திரைகள் சாப்பிடுவதால் அவை ஹார்மோன்களின் ஓட்டத்தை தாமதப்படுத்துகிறது. ஆனால் இவை உங்கள் கர்ப்பப்பையை பலவீனமாக்கும். மேலும் கர்ப்பப்பை சுருங்குதல், குழந்த பிறப்பு தாமதமாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


இயற்கையான முறையை மாதவிடாயை தாமதப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவை குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.,


1. ஆப்பிள் சைடர் வினிகர் : உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. அதுமட்டுமின்றி மாதவிடாய் தள்ளிப்போகவும் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாம். இதில் உள்ள அதிக அமிலத்தன்மை மாதவிடாயை தாமதப்படுத்த உதவும் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், நீங்கள் எதிர்பார்க்கும் தேதிக்கு 10-12 நாட்களுக்கு ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை (வெதுவெதுப்பான நீரில் கலந்து) தினமும் அருந்தி வந்தால் மாதவிடாய் தாமதமாகும்.


2. எலுமிச்சை சாறு : ஆப்பிள் சைடர் வினிகரைப் போலவே எலுமிச்சையும் ஒரு நல்ல இயற்கை மருந்தாகவே கருதப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின்-சி நிறைந்த இருப்பதாலும், இதில் உள்ள சிட்ரஸ் அமிலமும் மாதவிடாயை தள்ளிபோடுவதில் முக்கிய பங்காற்றுவதாக அறியப்படுகிறது. கூடுதலாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் இரத்த ஓட்டத்தை குறைகப்பதால் மாதவிடாய் தள்ளிச்செல்ல எலுமிச்சை சாறு அருந்தலாம்.


3. வெந்தயம் : மாதவிலக்கு வர வாய்ப்புள்ள நாட்கள் என்று நீங்கள் கருதும் நாட்களின் ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் போட்டு தண்ணீர் பருகி வர, மாதவிலக்கு தள்ளிப் போகும். வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தும் குளிக்கலாம், உடலுக்கு குளிர்ச்சியை தரும்.


4. சப்ஜா விதைகள் : சப்ஜா விதைகள் இந்திய சமையலில் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் / பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட வேண்டும். எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சாப்பிட ஆரம்பித்தால் எதிர்பார்த்த பலனை பெறலாம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றி பண்புகள் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து, தயிரில் கலந்து பருகிவிட்டு, ஓரிரு மலை வாழைப் பழங்களை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தாலும் மாதவிடாய் வராது என கூறுகின்றனர்.


5. முல்தானி மிட்டி : முல்தானி மிட்டி இயற்கையாகவே கிடைக்கும் ஒரு களிமண் போன்ற பொருளாகும். பெரும்பாலும் முல்தானி மிட்டி அழகு சார்ந்த விஷயங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, முல்தானி மிட்டியை பயன்படுத்துவது சிறந்த சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் மாதவிடாயை தாமதப்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒரு கப்பில் 25-30 கிராம் முல்தானி மிட்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கலக்கி அருந்த வேண்டும், இதனை மாதவிடாய் எதிர்பார்க்கப்படும் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடர்ந்து குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர். ஒரு நாளைக்கு 3-4 முறை இந்த கலவையை அருந்தி வந்தால் நல்ல பலனை பெற முடியும்.


6. பொட்டுக்கடலை : பொட்டுக்கடலை அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருளாகும். மாதவிடாயை தள்ளி போட நினைப்பவர்கள் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் பொட்டுக்கடலையை நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வர வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் எளிமையாக தள்ளி போடலாம், போட்டுக்கடலையை நல்ல எண்ணெய்யில் கலந்து சாப்பிடு வந்தாலும் நல்ல பலன் பெறலாம்.