வளர்ச்சிதை மாற்றமானது ஒருவரின் உடலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகிறது. வேகமாக வளர்சிதை மாற்றமானது உடல் எடையை குறைக்க முக்கியமாகும் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். வேகமான வளர்சிதை மாற்றம் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம்.
புரதச்சத்து : புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது ஆகும். புரதச்சத்து நம் உடலில் தசைகளை உருவாக்குகிறது. நார்ச்சத்து செரிமானத்தை துரிதப்படுத்த உதவுகிறது. தினசரி உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கரித்தால் வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. எனவே புரதச்சத்து நிறைந்த உணவுகளான துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைக ளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது.
உடற்பயிற்சி : நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஆயுட்காலம் குறைகிறது. இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானோர் உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உடலானது சுறுசுறுப்பாக இயங்குவதில்லை. அதற்காக தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியானது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, மன ஆரோக்கியத்தையும் தருகிறது. வாரத்திற்கு ஐந்து நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தீவிர பயிற்சி : அதிக உடல் பயிற்சிகளை செய்வதனால் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கலாம். சாதாரண உடல் பயிற்சிகளை விட, அதிக ஒர்க்அவுட் செய்யும் போது தேவையில்லாத கொழுப்புகள் நம் உடலில் கரைகிறது. அதிக எடை கொண்ட ஆண்கள் தொடர்ந்து 12 வாரங்கள் பயிற்சி செய்வதால் , சுமார் 17 சதவீத கொழுப்பு குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே தினமும் தீவிர பயிற்சியில் ஈடுபடலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது.
எண்ணெய் : தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை 12 சதவிகிதம் அதிகரிக்கும் என்பதால் தேங்காய் எண்ணெய்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். இது நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கிறது. எனவே உணவில் வெண்ணையை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க முடியும்.