சளி நாள்பட்ட தொல்லையாக இருந்து நம்மை வாட்டும். அது பருவ நிலை, உணவு முறை போன்ற காரணங்களால் ஏற்படும் தொற்று. ஆனால் சளி குறித்து கவலைக் கொள்ளும் அளிவிற்கு பெரிய நோயும் கிடையாது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி பல மாத்திரைகளை காலை இரவு என விழுங்காமல் வீட்டு சமைலைறையில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும். சளி பறந்து போகும். எவ்வாறு என்பதைக் காணலாம்.
வெதுவெதுப்பான பானங்கள்: காரசாரமான இஞ்சி டீ , மஞ்சள் கலந்த பால் குடியுங்கள். சளி இருக்கும்போது குளிர்ந்த நீரைத் தவிர்த்து சுடுநீரை அருந்துங்கள். இவ்வாறு செய்வதால் சளி நெஞ்சில் கட்டிக் கொள்ளாமல் இருக்கும். சுவாசத்திற்கு வழிவகைச் செய்யும். அதேபோல் அந்த சுடு நீரில் கொஞ்சம் உப்பு கலந்து காலை , இரவு என இரு வேளையும் வாய் கொப்பளியுங்கள்.