முகப்பு » புகைப்பட செய்தி » விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

tips to get pregnant : 43 சதவீதம் பேர் கருத்தரிப்பதில் சிரமம் இருப்பதாகவும், அதற்காக அவர்கள் அதிகம் கஷ்டப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் கர்ப்பம் தரிக்க கடின உழைப்பு மற்றும் மன அழுத்தம் நிறைந்ததாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

  • 111

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    சில தம்பதிகள் பாலுறவின் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் தரிப்பார்கள், இன்னும் சிலருக்கு சில மாதங்கள் எடுக்கும். ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு விஞ்ஞானம் உள்ளது. அதற்கு பின்னர் தான், தம்பதிகள் கர்ப்பம் தயாரிக்கிறார்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த விஞ்ஞானம் என்ன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?. உடனடியாக கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாமா.

    MORE
    GALLERIES

  • 211

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, கர்ப்பத்தில் பாசிட்டிவ் முடிவைப் பெற, தம்பதிகள் ஆரம்பத்தில் இருந்தே குறைந்தது 78 முறை உடலுறவு கொள்கிறார்கலாம். அதாவது, 6 மாதங்கள் முதல் 158 நாட்களுக்குள் 78 முறை உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 311

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    இது குறித்து சுமார் 1,194 பெற்றோர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் கருத்தரிக்க மாதத்திற்கு குறைந்தது 13 முறையாவது உடலுறவு கொள்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. என்னது…. இத்தனை முறை உடலுறவா? என வேடிக்கையாகத் தோன்றினாலும், எப்படியாவது பாசிடிவான ரிசல்டை பெற்றிட வேண்டும் என்ற கவலை, மன அழுத்தமே இதற்குக் காரணம் என கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 411

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது உடலுறவு கொள்வது ஒரு வேலைப்போல் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். 43 சதவிகித மக்கள் கருத்தரிக்க முடியவில்லையே என பெரும் அழுத்தமாக உணர்ந்ததாகவும்.. இனி குழந்தையே பிறக்காதோ என்ற பயம் தோன்றியதாக கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கருத்தரிப்பது கடின உழைப்பாகவும் மன அழுத்தமாகவும் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 511

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    சிலர் கருத்தரிப்பதற்கு செக்ஸ் பொசிஷனும் முக்கிய காரணம் என்று நம்புகிறார்கள். அப்படி மிகவும் பிரபலமான நிலைகளாக 3 பொசிஷன்களை முயற்சி செய்கின்றனர். அதில் அதிகமாக முயற்சிப்பது டாக்கி ஸ்டைல் (doggy style). இதை 36 சதவீத தம்பதிகள் முயற்சி செய்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 611

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    பல நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளக்கூடாது. பல முறை செக்ஸ் வைத்துக்கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்பது கற்பனையான நம்பிக்கை. அது உண்மை அல்ல.

    MORE
    GALLERIES

  • 711

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    உண்மை என்ன என்றால், அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். எனவே, குழந்தை வேண்டும் என விரும்பும் தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் பலன் கிடைக்கும். அப்படி முயற்சித்த தம்பதிகளுக்கு கருத்தரித்தல் விகிதம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 811

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    பெண்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சாதகமாக இருக்காது. அவர்களுடைய கருப்பை, அண்டவிடுப்பு, மாதவிடாய் இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் முயற்சி செய்ய வேண்டும். கருப்பை சாதகமாக இருக்க அண்டவிடுப்பிற்கு முன் ஐந்து நாட்கள் மற்றும் அண்டவிடுப்பு நாட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 911

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    அண்டவிடுப்பின் பொதுவான காலம் 28 நாட்களாகும். அதாவது, மாதவிடாய் சுழற்சி முடிந்து 14 வது நாள் இது நிகழும். இது மாதவிடாய் சுழற்சி வருவதற்கு மத்திய நாட்களில் உருவாகிறது. அதாவது, மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்போ அல்லது நான்கு நாட்களுக்குள்ளோ நிகழும். இந்த அண்டவிடுப்பின் போது கரு முட்டை வெளியேறும்.

    MORE
    GALLERIES

  • 1011

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    அவை கருப்பை குழாய்க்கு (fallopian tube) சென்று தேங்கியிருக்கும். இந்த சமயத்தில் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும் போது காத்திருக்கும் முட்டையால் அவை ஈர்க்கப்படலாம். அப்போது அது கரு முட்டையாக உருவாகி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவ்வாறு பெண்களின் உடலுக்குள் செல்லும் விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிர் வாழும்.

    MORE
    GALLERIES

  • 1111

    விரைவில் கர்ப்பமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

    உங்கள் அண்டவிடுப்பு நாட்களை சரியாக கணக்கிட சில நம்பகமான செயலிகள் உள்ளன. அவை உங்கள் மாதவிடாயை கணக்கிடும். இல்லையெனில் நீங்களாகவே உங்கள் தினசரி காலண்டரில் குறிப்பிட்டு வைக்கலாம். ஒவ்வொரு சுழற்சியும் உங்கள் மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு முடிவடையும். உங்கள் சுழற்சியின் நடுப் புள்ளி அதாவது மத்திய நாட்களை குறியுங்கள். உங்களுக்கு 28 நாட்கள் சுழற்சி இருந்தால் 14 வது நாளில் உங்களுக்கு அண்டவிடுப்பு நாள் ஆரம்பமாகும். இந்த சமயத்தில் நீங்கள்  உடலுறவு வைத்துக்கொண்டால் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகம்.

    MORE
    GALLERIES