ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

வேப்ப இலையில் இருந்து பிழியப்பட்ட சாற்றை பூஞ்சை தொற்று பாதித்துள்ள பகுதிகளில் தடவுவதன் மூலம் போன்ற பூஞ்சைகளை அழிக்க முடியும்.

 • 17

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  மனிதர்களுக்கு ஏற்படும் முக்கிய தொற்று வியாதிகளில் பூஞ்சை தொற்று மிக முக்கியமான ஆபத்து நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 300க்கும் மேற்பட்ட பூஞ்சை வகைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூஞ்சை தொற்றுகள் உடல்நலத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதலினாலும் பூஞ்சைகள் பரவுவதற்கு எளிய சூழல் உண்டாகியுள்ளது. இவற்றைத் தவிர மாறிவரும் வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பூஞ்சை தொற்றுக்கள் எளிதாக பரவுவதற்கு வழி செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  ஆனால் ஆயுர்வேத மருத்துவம் பண்டைய காலத்தில் இருந்தே இந்த பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் இயற்கையாக விளையும் தாவரங்களையும், மூலிகை வகைகளையும் கொண்டு பூஜை தொற்றுகளை அழிக்கும் முறைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் கையாளப்பட்டு வருகின்றன. டீனியா கப்பிடிஸ், ஃபங்கள் ஆக்னே போன்ற பல்வேறு விதமான பூஞ்சை தொற்றுகளுக்கும் ஆயுர்வேத மருத்துவம் சிகிச்சை அளிக்கிறது. உடல் பருமன், நீரிழிவு நோய், நீண்ட நாட்களுக்கு ஸ்டெராய்டு பயன்படுத்துபவர்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுபவர்களை பூஞ்சை தொற்றுகள் மிக எளிதாக தாக்குகின்றன.

  MORE
  GALLERIES

 • 37

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  பெரும்பாலான பூஞ்சை தொற்றுகளை இயற்கையாக விளையும் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் மூலமே சரி செய்ய முடியும். வேம்பு, துளசி, லவங்கப்பட்டை, யூகலிப்டஸ் போன்ற பல்வேறு மூலிகைகள் பூஞ்சை தொற்றுக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத்தான் பூஞ்ஜை தொற்றுகளை போக்குவதற்கு மிகச்சிறந்த மருத்துவ முறையாக ஆயுர்வேத மருத்துவம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவற்றைத் தவிர நீங்கள் வீட்டிலேயே பூஞ்சை தொற்றுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற முடியும்.

  MORE
  GALLERIES

 • 47

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  சருமத்தில் உண்டாகியுள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு சோற்றுக்கற்றாழை பயன்படுத்தலாம். சோற்றுக் கற்றாழையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தும், மேலும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மையையும் கொண்டுள்ளது. மேலும் சோற்றுக் கற்றாழை பூஞ்சைகளோடு போராடி அவற்றை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  வேம்பு இலைகள் அதாவது வேப்ப மரத்தின் நிலைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தமிழ் பாரம்பரியத்தில் மிக முக்கிய மருத்துவ குணமுடையதாக பார்க்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற மிகக் கொடிய நோய்களுக்கு கூட வேம்பு இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றில் உள்ள நிம்பியோடல் மற்றும் கெடுனைன் ஆகிய இரண்டு மருந்துகளும் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக செயல்பட கூடியவை. இவற்றைத் தவிர வேப்ப இலையில் இருந்து பிழியப்பட்ட சாற்றை பூஞ்சை தொற்று பாதித்துள்ள பகுதிகளில் தடவுவதன் மூலம் போன்ற பூஞ்சைகளை அழிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 67

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  வேம்பு இலைகளை காய வைத்து பிறகு அவற்றை பொடியாக்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சந்தனத்தை தூளாக்கி நாம் சேகரித்து வைத்துள்ள வேம்பு பொடியுடன் சேர்த்து ஆசை போன்று உண்டாக்கி அதனுடன் சிறிதளவு பன்னீரை சேர்த்து பூஞ்சை தொற்றுகள் பாதித்துள்ள இடத்தில் தடவலாம். இது பூஞ்சைகளை கொல்லுவதற்கு உதவி செய்யும்.

  MORE
  GALLERIES

 • 77

  கற்றாழை, வேப்பிலை.. பூஞ்சை தொற்றுகளுக்கு இப்படி செய்தால் சரியாகும்..!

  பூஞ்சை தொற்றில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது? ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உடல் எந்த பகுதியையும் ஈரமாக வைத்திருக்கக் கூடாது. குளித்து முடித்தவுடன் உடலில் அனைத்து பகுதிகளையும் நன்றாக துடைக்க வேண்டும்.

  MORE
  GALLERIES