நாம் நமது தசைகளைப் பயன்படுத்தும் போது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருள் தான் கிரியேட்டினின் ஆகும். உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், ரத்தத்தில் இருந்து இந்த கிரியேட்டினினை பிரித்து சிறுநீர் மூலமாக அதை வெளியேற்றி விடும். அதுவே உங்கள் உடலில் கிரியேட்டினின் அளவு கூடுதலாக இருக்கிறது என்றால் சிறுநீரகம் முறையாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
சராசரி கிரியேட்டினின் அளவு எவ்வளவு?வயது, பாலினம் அடிப்படையில் ஒவ்வொரு நபருக்கும் கிரியேட்டினின் அளவு மாறுபடுகிறது. ஒரு டெசி லிட்டர் அளவிலான ரத்தத்தில் எத்தனை மில்லி கிராம் அளவுக்கு கிரியேட்டினின் இருக்கிறது என கணக்கீடு செய்யப்படுகிறது. ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 என்ற அளவிலும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 என்ற அளவிலும், வளர் இளம் பருவத்தினருக்கு 0.5 முதல் 1.0 என்ற அளவிலும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
கிரியேட்டினின் சப்ளிமண்ட்ஸ் தவிர்க்கவும் : நீரிழிவு நோய் இருப்பவர்கள், கிரியேட்டினின் அளவை குறைத்து சிறுநீரக செயல்பாட்டை சீராக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால், கிரியேட்டினின் சப்ளிமண்ட்ஸ் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். உடலில் அதிக கிரியேட்டினின் இருந்தால் உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும்.