முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

உடலில் உள்ள தேவையற்ற எடையை குறைப்பதில் மற்ற டீ-யை காட்டிலும் கிரீன் டீ பயனுள்ளதாக இருப்பது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா.!

 • 19

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  சமீப காலமாக கிரீன் டீ மற்றும் தேன் உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுக்கான ஒரு பிரபலமான ட்ரெண்டாக மாறிவிட்டன. இவற்றை பல இன்ஃப்ளூயன்ஸர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களும் விளம்பரப்படுத்துகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 29

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  கிரீன் டீ மற்றும் தேன் உள்ளிட்டவை எடை இழப்புக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகளையும் வழங்குகின்றன. உடல் எடையை குறைப்பதில் உடல்செயல்பாடுகளுக்கு சமமாக நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.

  MORE
  GALLERIES

 • 39

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  பெங்களூருவில் உள்ள Jindal Naturecure Institute-ன் பிரபல தலைமை டயட்டிஷியன் சுஷ்மா பிஎஸ் கூறுகையில், தங்கள் உணவுத் தேர்வுகளின் அடிப்படையில் இந்தியர்கள் மிகவும் செலக்டிவாக உள்ளனர். சாப்பாடு அல்லது பானங்கள் சுவையாக இல்லாவிட்டால் அதை மக்கள் எடுத்து கொள்வது கேள்விக்குறியாகிறது. பலர் கிரீன் டீ-யை முயற்சிக்க தயங்குகிறார்கள். ஏனென்றால் அது சற்று கசப்பானது என அவர்களே நினைத்து கொள்கிறார்கள் என்றார்.

  MORE
  GALLERIES

 • 49

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  கிரீன் டீ-யில் உள்ள பொருட்கள் என்ன? உடலில் உள்ள தேவையற்ற எடையை குறைப்பதில் மற்ற டீ-யை காட்டிலும் கிரீன் டீ பயனுள்ளதாக இருப்பது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா.? இதற்கான பதில் கிரீன் டீ-யின் முக்கிய மூலப்பொருளான Catechins-களில் உள்ளது, இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். குறிப்பாக இது Epigallocatechin Gallate (EGCG). இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும் Catechins ஆகும். கிரீன் டீ-யில் இருக்கும் மற்றொரு முக்கிய மூலப்பொருள் காஃபின். வழக்கமான 1 கப் காஃபியில் இருப்பதை விட குறைவான அளவிலேயே காஃபின் காணப்டுகிறது என்றாலும் இந்த அளவு கொழுப்பை எரிக்க மற்றும் உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்தும் வேலையை செய்ய போதுமானது

  MORE
  GALLERIES

 • 59

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  செரிஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்டின் நிறுவனரான பரிமல் ஷா பேசுகையில், கிரீன் டீ-யில் இருக்கும் EGCG மற்றும் காஃபின் ஒரு சக்திவாய்ந்த ஜோடியாக செயல்படுகின்றன. இவை ஒன்று சேர்ந்து கொழுப்பை ரத்த ஓட்டத்தில் திரட்டுவதில் கொழுப்பு செல்களுக்கு உதவுகின்றன என்கிறார். மொத்தத்தில் கிரீன் டீயில் உள்ள Catechins வளர்சிதை மாற்றம் மற்றும் ஃபேட் ஆக்ஸிடேஷனை அதிகரிக்கும் என கருதப்படுகிறது, இது எடையை குறைப்பதில் பங்களிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 69

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  தேன்: நாளை சிறப்பாக துவங்க தேன் ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும். கொலஸ்ட்ரால் இல்லாத அமிர்தமாக இருக்கும் தேன், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பலன்களை அளிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து பருகுவது Anti-cellulite ட்ரீட்மென்ட்டாக அற்புதங்களை செய்கிறது. அடிபோசைட்டுகளில் செயல்படுவதன் மூலம் உடல் எடையை குறைக்கிறது. மேலும் தேன் ஸ்டாமினா லெவலை மேம்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் பரிமல் ஷா.

  MORE
  GALLERIES

 • 79

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  தேன் மற்றும் கிரீன் டீயை விட எது சிறந்தது என யோசிக்கிறீர்களா.? இது இரண்டும் சேர்ந்த கலவை தான் என் குறிப்பிடுகிறார் ஷா. அதே நேரம் வழக்கமாக பிளாக் டீ-யை காய்ச்சுவது போல காய்ச்சாமல் வித்தியாசமாக கிரீன் டீயை காய்ச்சினால் சுவையாக இருக்கும். கிரீன் டீ-யை காய்ச்ச கொதிக்கும் நீரை பயன்படுத்தி தேன் சேர்த்தால் கூட கசப்பாக தான் இருக்கும். எனவே இலைகளை 80 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் 3 முதல் 5 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் 1 ஸ்பூன் தேனை சேர்த்தால் சரியாக இருக்கும் என்கிறார் ஷா.

  MORE
  GALLERIES

 • 89

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  உடல் எடையை அதிகம் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளவர்களுக்கு உடல் பயிற்சிகள் கைகொடுக்கும் என்றாலும் தங்கள் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுத்தால் எதிர்பார்க்கும் முடிவுகளை பெற முடியும். எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உணவுகளை தேர்வு செய்யும் முன் அவற்றின் லேபிளில் கவனம் செலுத்த வேண்டும். தேனின் கூடுதல் நன்மைகளுடன் கிரீன் டீயையும் சேர்ப்பது எடை மேலாண்மை பயணத்தில் நல்ல பலன்களை பெற சிறந்த வழி. கிரீன் டீ மற்றும் தேன் ஆகிய இரண்டின் கலவையானது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பிற விளைவுகளின் மூலம், எடை இழப்பிற்கு பெரிதும் பங்களிக்கும்.

  MORE
  GALLERIES

 • 99

  க்ரீன் டீயுடன் ஒரு ஸ்பூன் தேன்... எடை குறைக்க இப்படி யூஸ் பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

  இருப்பினும் தேன் மற்றும் கிரீன் டீ-யால் மட்டுமே உடல் எடை குறையாது, இவை சீரான டயட் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் உள்ளிட்டவையும் இதில் அடக்கம் என்கிறார் சுஷ்மா. மார்க்கெட்களில் Honey green tea தயரிப்புகள் விற்கப்படுகின்றன. இவற்றில் சில தயாரிப்புகளில் கூடுதல் சர்க்கரைகள் அல்லது பிற பொருட்கள் இருக்கலாம். இதன் காரணமாக தயாரிப்புகளின் ஆரோக்கிய நன்மைகள் குறையலாம். அதே போல கிரீன் டீ-யில் தேன் சேர்த்து குடிப்பதை சிலர் விரும்புகிறார்கள். இருப்பினும் கொதிக்கும் கிரீன் டீயில் தேனைச் சேர்ப்பது தேனின் ஊட்டச்சத்து நன்மைகளை அழிக்க கூடும். எனவே கிரீன் டீ-யில் தேனை சேர்க்கும் முன், டீ ஆறுவதற்கு நேரம் கொடுக்க  வேண்டும் என்கிறார் சுஷ்மா.

  MORE
  GALLERIES