முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

ஆரோக்கியமான வாழ்க்கை முறை , தொடர்ச்சியான உடற்பயிற்சி பழக்கம் , நிம்மதியான தூக்கம் , ஆரோக்கியமான உணவு இவற்றை முறையாக கடைபிடித்தாலே இந்த பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • 17

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    இந்தியாவில் 20% பெண்கள் பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவவரம் தெரிவிக்கிறது. கருப்பையில் உருவாகும் நீர்க்கடி காரணமாக அவர்களின் மாதவிடாய் சுழற்ச்சியில் உண்டாகும் மாற்றமே பிசிஓஎஸ். இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை , தொடர்ச்சியான உடற்பயிற்சி பழக்கம் , நிம்மதியான தூக்கம் , ஆரோக்கியமான உணவு இவற்றை முறையாக கடைபிடித்தாலே இந்த பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்று வலியை சமாளிக்க இந்தவீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள். வலி குறையலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    சீரகத் தண்ணீர் :சீரகத் தண்ணீர் பல வழிகளில் உதவுகிறது. குறிப்பாக செரிமானத்திற்கும், எடை இழப்பிற்கும் உதவுகிறது. சீரகத் தண்ணீரில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது ஹார்மோன்கள், பிசிஓஎஸ் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் , சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    வெந்தய நீர் : வெந்தய நீர் தோல், முடி மற்றும் ஹார்மோன் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவுகிறது. விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடித்துவர பிசிஓஎஸ் -க்கு தீர்வாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நீர் இன்சுலின் உணர்திறன், ஆரோக்கியமான கருப்பைகள் மற்றும் வழக்கமான சுழற்சிகளை மேம்படுத்த உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதன் காரத்தன்மை காரணமாக, இது உடலின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர, இது கருப்பையில் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    பிளம் பழச்சாறு : பிசிஓஎஸ்ஸை எதிர்த்துப் போராடுவதற்கு பிளம் பழச்சாறு மிகவும் இயற்கையான வழியாகும். இது ஹார்மோன்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு இரண்டையும் நிர்வகிக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    கற்றாழை சாறு : கற்றாழை ஜெல் தோல் பராமரிப்பிற்கு பெயர் பெற்றது. வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கற்றாழை நீரை குடிக்க செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. குறிப்பாக பிசிஓஎஸ் நோயாளிகளுக்கு நல்லது. இதை குடிப்பதன் மூலம், அனைத்து நச்சுகளும் உடலில் இருந்து வெளியேறி ஆரோக்கியமான ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...

    முருங்கை இலை தண்ணீர் : ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு முன் அல்லது பின் ஒரு கப் முருங்கை இலை கொதிக்க வைத்த தண்ணீர் குடிப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பிசிஓஎஸ் தடுக்கவும் உதவுகிறது. இது ஆண்ட்ரோஜன் அளவைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

    MORE
    GALLERIES