புதிதாக குழந்தை பெற்ற்க்கொண்ட தாய்மார்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் தாய்ப்பால் கட்டிக்கொள்வதும் ஒன்று. குழந்தை பெற்றுக்கொள்ளும் வலியைக் காட்டிலும் தாய்ப்பால் கட்டிக்கொண்டு ஏற்படும் வலி சொல்லில் அடங்காதது என்பார்கள். ஆனால் இந்த வலியை தவிர்க்கவும் முடியாது. ஆரம்பத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். ஆனால் குழந்தைகளால் அதிகம் குடிக்க முடியாது என்பதால் அது மார்பில் கட்டிக்கொண்டு கடுமையாக வலிக்கும். இதை அம்மாகளே சில வீட்டு வைத்தியங்கள் செய்து தாய்ப்பாலை வெளியேற்றிட முடியும் அல்லது வலியை குறைக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.
தாய்ப்பால் கட்டிக்கொள்ள காரணம் : குழந்தை ஈன்ற முதல் மாதத்தில் அதிக பால் சுரக்கும். குழந்தைக்கு சிறு வயிறு என்பதால் கொஞ்சம் தான் குடிக்கும் அந்த சமயத்தில் பால் கட்டிக்கொள்ளலாம். குழந்தைக்கு சரியாகப் பால் கொடுக்கவில்லை, மார்பகங்களை அழுத்திப் படுத்தல், பாலை நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பால் கட்டிக்கொள்ளும். இந்த பால் கட்டுதல் வலி மட்டுமல்லாது காய்ச்சலைக் கூட உண்டாக்கும். எனவே இதற்கு சில வீட்டு வைத்தியங்களே போதுமானது. அவை என்னென்ன பார்க்கலாம்.