கற்றாழை சாறு : ஆரோக்கியத்திற்கு எண்ணிலடங்கா நன்மைகளைத் தரும் கற்றாழை சாறு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். அசிடிட்டி காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்சனை தொடர்ந்தால், அதை குணப்படுத்த, உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கற்றாழை சாற்றை குடிக்கவும். இதனால் நெஞ்செரிச்சல் குணமாகும். குளுர்ச்சியான பொருள் பக்கவிளைவை உண்டாக்குமெனில் தவிர்க்கவும்.
மஞ்சள் கடுகு : மஞ்சள் கடுகு சரியான செரிமானத்தை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் கடுகு அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையிலிருந்து விடுபட பயனுள்ளதாக இருக்கும். லஸ்ஸியில் ஒரு சிட்டிகை மஞ்சள் கடுகு பொடி செய்து குடிப்பதால் பிரச்சனை வராது.