கோடிக்கணக்கான தேநீர் பிரியர்களில் நீங்களும் ஒருவரா? அப்படி என்றால் துளசி தேநீரை கண்டிப்பாக பருக வேண்டும். பேசில் என்று அழைக்கப்படும் துளசியில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன என்று பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைத்து வருகின்றது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல விதமான தொற்று நோயிலிருந்து பாதுகாக்கவும், துளசி உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது : நம் உடலின் மெட்டபாலிக் ரேட் தான் நாம் எவ்வளவு கலோரிக்களை எரிக்கிறது என்று முடிவு செய்கிறது. உடலின் இந்த வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், வேகமாக செயல்பட்டு, கூடுதலாக கலோரிகள் எரிந்து, உடல் எடை குறையும். துளசி, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதனால். நீங்கள் அதிக கலோரிக்களை எரித்து, அதிக எடையைக் குறைக்கலாம்.
எடை குறைப்பு : நீங்கள் எடை குறைக்க வேண்டும் என்றால், அல்லது எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உங்களுக்கு துளசி தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே கூறியது போல, வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு, துளசி தேநீர் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உறிஞ்சுவதற்கும் உதவி செய்கிறது. தேவையான ஊட்டச்சத்துகளை நீங்கள் பெற்றாலே, உடல் எடை குறைவது எளிதானதாக மாறும்.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : துளசி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்லீரல் அதிகப்படியான என்சைம்களை உற்பத்தி செய்தால், அது கல்லீரல் பாதிப்பில் சென்று முடியும். துளசி தேநீர், கல்லீரலை பாதுகாத்து, என்சைம்கள் அதிக உற்பத்தியை தடுக்கிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொந்தரவிற்கு : துளசியை அவ்வபோது சாப்பிட வேண்டும் உங்கள் அம்மாவோ பாட்டியோ, தேநீர் அல்லது துளசி நீர் வடிவில் உங்களுக்கு கொடுத்ததை நினைவிருக்கிறதா? சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க நலிந்து துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அதே போலே, துளசி தேநீரை பருகுவது, சளி, மார்புச்சளி, மூக்கடைப்பு, ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.