எப்போதுமே விடுமுறை நாட்களை அமைதியாக மகிழ்ச்சியுடன் கழிப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு வெளியே செல்வது, அரட்டை அடிப்பது, விளையாடுவது போன்ற பல விஷயங்கள் உடலை மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ள உதவும். அதே சமயத்தில் சில விடுமுறை தினங்களில் நன்றாக மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருக்கையில் திடீரென மன அழுத்தத்துடன், மகிழ்ச்சியற்றும் உணர்வது நடக்கக்கூடிய ஒன்றுதான். இதை ஆங்கிலத்தில் ஹாலிடே ப்ளூஸ் ( Holiday Blues) என்று அழைப்பார்கள்.
இது கிட்டத்தட்ட ஒரு மனநல குறைபாடு போன்றது தான். எங்கே நாம் ஒருவேளை மற்றவரை காயப்படுத்தி விடுவோமோ என்று பயப்படுவதும் தாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போவதும் இந்த மன நோயை உண்டாக்குகின்றன. இது சீசனல் அஃபெக்டிவ் டிசார்டர் (SAD) என அழைக்கப்படுகிறது. இந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர சில குறிப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.
அதிக அளவு குடிப்பழக்கம் கூடாது: விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாக கழிக்கும்போது அதிக அளவில் ஆல்கஹால் கலந்த மதுபானங்களை குடிப்பது தவிர்க்க வேண்டும். அல்கஹால் மூளையில் வேதி வினைகளை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தூங்கி எழும் நேரத்தில் மாற்றம், மன அழுத்தம், போன்ற பல்வேறு பாதிப்புகள் ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுதல் : சாதாரண நாட்களில் நீங்கள் என்ன விதமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வீர்களோ அதையே விடுமுறை நாட்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் பலர் தங்களது அன்றாட நாட்களின் போது செய்யும் வேலைகளை முழுவதுமாக மாற்றிக்கொண்டு புதிய பழக்கங்களை கடைபிடிக்கின்றனர். இதுவும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமையும். விடுமுறை நாட்களில் புதிய பழக்கங்களை மேற்கொள்வதை விட வழக்கமான பழக்கங்களை கடைபிடிக்க முயற்சி செய்வதே நன்மை தரும்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்: மற்றவர்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பது எப்போதும் ஏமாற்றத்தை தான் தரும். மேலும் விடுமுறை நாட்களில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதும், மிக அதிக அளவிலான குறிக்கோள்களை வைத்து செயல்படுவதும் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கண்டிப்பாக மற்றவரின் உதவியை நாடலாம்.
உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுங்கள்: விடுமுறை நாட்களை எப்போதும் வீட்டிற்குள் தனியாக கழிப்பது கூடாது. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வெளியே செல்வது உணவகங்களுக்கு செல்வது பல்வேறு இடங்களுக்கு சுற்றி பார்க்க வேண்டும். நீங்கள் இதுவரை செல்லாத இடங்களுக்கு செல்வது போன்ற செய்வதன் மூலம் மனதளவில் புத்துணர்ச்சியாக உணரலாம்.