முகப்பு » புகைப்பட செய்தி » ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

நம்முடைய உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாக இருந்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

  • 15

    ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

    இன்றைக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் பல மன உளைச்சல்கள் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். இதனால் பல உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்கும் சூழல் ஏற்படும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் முக்கியமான ஒன்றாக உள்ளது கார்டிசோல் பாதிப்பு.. பொதுவாக நாம் மன அழுத்தம் அல்லது பயத்தை அனுபவிக்கும் போது, அட்ரீனல் சுரப்பிகளால் ஒரு ஹார்மோன் வெளியாகும். இதைத் தான் கார்டிசோல் என்கிறோம். இந்த ஹார்மோன் தான் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலின் பல செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

    இந்த கார்டிசோல் ஹார்மோன் நமது உடலில் சீராக இல்லாத போது அதாவது நம்முடைய உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாக இருந்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே பல மக்களுக்கு வீட்டு கவலை, கடன், தொழில் வாழ்க்கை போன்ற பல பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும். நாம் முன்பே கூறியது போல கார்டிசோல் ஒரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் என்பதால், இந்த கவலைகள் எல்லாம் மனதில் சேர்ந்து, அதிகாலை நேரத்தில் கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும். இவ்வாறு நம்மை அறியாமலே நம்முடைய உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் உயர் கார்டிசோலின் அறிகுறிகள் மற்றும் நிர்வகிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 35

    ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

    ஹை கார்டிசோலின் அறிகுறிகள்: சோர்வு, தூக்கம், செரிமான பிரச்சனைகள், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கார்டிசோல் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக அவை உள்ளன. குறிப்பாக வயிறு மற்றும் முகத்தைச் சுற்றி எடை அதிகரிப்பு, தசை பலவீனம், உயர் ரத்த சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம், பலவீனமான எலும்புகள், மன நிலையில் மாற்றம், நினைவாற்றல் பிரச்சனை போன்றவையும் ஹை கார்டிசோல் பாதிப்பின் அறிகுறிகளாக உள்ளன.

    MORE
    GALLERIES

  • 45

    ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

    ஹை கார்டிசோலை நிர்வகிப்பதற்கான வழிகள்: நம்முடைய வழக்கமான வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை நீங்கள் மேற்கொண்டாலே, ஹை கார்டிசோல் பாதிப்பை நிர்வகிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல தூக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தல், மனதை நிம்மதி இழக்கச் செய்யும் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைப் பயிற்சி செய்தல் போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டாலே ஹை கார்டிசோல் பாதிப்பை நிர்வகிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    MORE
    GALLERIES

  • 55

    ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால்தான் இந்த பிரச்சனைகள் வருதா..? உஷாராக இருங்கள்..!

    எனவே இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் முறையாக கடைப்பிடித்து வந்தாலே உடல் நல பிரச்சனைகள் ஏற்படுத்துவதை தடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES