முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

உடலுக்கு தேவையான இந்த கொலஸ்ட்ராலை லிப்போபுரோட்டீன் என்ற துகள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.

  • 17

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளே உடல்நலக் கோளாறுகளுக்கான வாயிற்படிகளாக அமைகின்றன. அதில் ஒன்று கொழுப்பு. கொழுப்பில் ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு என இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன. கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கொழுப்பானது, ஹார்மோன்களை சீராக வைத்திருக்கவும், வைட்டமின் டி மற்றும் உயிரணு சவ்வுகளை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 27

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    உடலுக்கு தேவையான இந்த கொலஸ்ட்ராலை லிப்போபுரோட்டீன் என்ற துகள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. அதிக கொழுப்பும், குறைந்த புரதம் கொண்ட லிப்போபுரோட்டீனும் சேர்ந்த குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்களை உருவாக்குகிறது. இவையே உடலுக்கு தீங்குகளை விளைவிக்கின்றன. குறிப்பாக, உணவில் ஆரோக்கியமற்றவையாக இருக்கும்போது, உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்கின்றன. இவை தமனிகளில் அதிகம் சேர்ந்து நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிர்க்கொல்லி பிரச்சனைகளின் மூலமாக மாறுகின்றன.

    MORE
    GALLERIES

  • 37

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    கால்களில் தென்படும் அறிகுறிகள் : கொலஸ்ட்ரால் பிரச்சனையின் ஆபத்தான காரணி என்னவென்றால், உடலில் ஆபத்தான நிலையை அடைந்து அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரை, அது எந்த அறிகுறிகளையும் காட்டாது. கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முறையாக ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, கால்களில் உள்ள அகில்லெஸ் தசைநார் பாதிக்கத் தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    கால்களில் வலி : கால்களில் உள்ள தமனிகள் அடைபடும்போது, போதுமான ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் கால்களின் கீழ் பகுதியை அடையாது. அப்போது, கால்களின் கீழ்ப்பகுதி கனமானகவும், சோர்வாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். கீழ் மூட்டுகளில் எரிச்சல் பெரும்பாலானோருக்கு ஏற்படும். தொடை உள்ளிட்ட கால் பகுதிகளில் அதிக வலி இருக்கும். சிறிய தூரம் நடந்தால்கூட அதிகமான வலி இருந்தால், கொலஸ்ட்ரால் அளவை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    கால் பிடிப்புகள் : கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு கால் பிடிப்பு பிரச்சனைகள் இருக்கும். தூங்கும் சமயங்களில் கடுமையான கால் வலிகளை உணரும் அவர்கள், குதிங்கால், கால் விரல்களில் கடுமையான வலிகளை எதிர்கொள்வார்கள். கால்களை தொங்கிய நிலையில் வைத்திருக்கும்போது மட்டும், வலி குறைந்தது போன்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    தோல் மற்றும் நகத்தின் நிறத்தில் மாற்றம் : ரத்த ஓட்டம் குறைவது மூலம் கால் நகங்கள் மற்றும் தோல் நிறம் மாறும். ரத்தத்தின் மூலம் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் முறையாக கிடைக்கும்போது நகங்களின் நிறம் மாறாது. ஒருவேளை உங்கள் நகங்கள் மாறினால், போதுமான ஊட்டசத்து கிடைக்கவில்லை என புரிந்து கொள்ளுங்கள். கால் நகம் தடித்து மெதுவாக வளர்வதும், கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாகும்.

    MORE
    GALLERIES

  • 77

    கால்களில் கொழுப்பு அதிகம் இருந்தால் என்ன ஆகும்...? அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

    குளிச்சியான பாதம் : குளிர்காலங்களில் பாதம் குளிர்ந்த நிலையில் இருக்கும். ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் காலின் பாதம் ஒரேமாதிரியாக இருந்தால், நீங்கள் கட்டாயம் மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்வது சிறந்தது.

    MORE
    GALLERIES