கொலஸ்ட்ரால் என்பது உங்கள் உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். செரிமானத்திற்கு உதவும் ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. எல்லாவற்றிலும் நன்மை தீமை இருப்பது போல, கொலஸ்டிராலில் குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும் போது, குறிப்பிட்ட வகை கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து அதிக கொலஸ்டிரால் உணவுகள் இங்கே.
சிவப்பு இறைச்சி : பொதுவாக இறைச்சி வகைகளைப் பொறுத்தவரை, சிவப்பு இறைச்சியில் அதிக கொழுப்பும் கொலஸ்டிராலும் உள்ளன. குறிப்பாக, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ரோஸ்ட், ஸ்டீக் ஆகிய இறைச்சியில் அதிக கொழுப்பு உள்ளது. எனவே, இதற்கு மாற்றாக, லீன் மீட் எனப்படும் குறைவான சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ள இறைச்சியை சாப்பிடலாம்.
பதப்படுத்தப்பட்ட / ரெடிமேட் இறைச்சி : இறைச்சியில் புரதம் நிறைய இருந்தாலும், அவை பதப்படுத்தப்பட்ட இறைச்சியாக இருந்தால், அதில் அதிக உப்பும், ரசாயனங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது பதப்படுத்தப்பட்ட பிற சைவ உணவுகளுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஹாட் டாக், பேகன், ஆகியவை. எனவே, இவ்வகையான உணவுகள் அனைத்துமே அதிக கொலஸ்டிரால் கொண்டவை.
முழு கொழுப்பு பால் உணவுகள் : பால், தயிர் மற்றும் வெண்ணெய் ஆகிய உணவுப்பொருட்களில் அதிக அளவு சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளன. அதிலும், ஒரு சில வெண்ணெய் வகைகளில் அதிக உப்பும் இருக்கிறது. எனவே, இந்த வகையான முழு கொழுப்பு உள்ள பால் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, ஸ்கிம் மில்க், குறைவான கொழுப்புள்ள சுவிஸ் சீஸ், மொசரல்லா சீஸ், பன்னீர் ஆகிய உணவுகளை சாப்பிடலாம்.
பொறித்த உணவுகள் : எந்த உணவாக இருந்தாலும், டீப் ஃபிரை எனப்படும் எண்ணைய்யில் பொறித்து சாப்பிடுவது அதிக கொலஸ்டிரால் கொண்ட உணவாக மாறும். உதாரணமாக, உருளைக் கிழங்கு சிப்ஸ், பொறித்த கோழி, போன்றவை. எனவே, அதிக அளவில் எண்ணையில் பொறித்த உணவுகளை (சைவம் மற்றும் அசைவம்) சாப்பிடக்கூடாது. பொறிப்பதற்கு பதிலாக, ஓவனில் பேக் செய்யலாம் அல்லது வறுக்கலாம்.
பேக்கரி உணவுகள் மற்றும் இனிப்புகள் பொதுவாக பேக்கரி உணவுகள் அதிக வெண்ணெய், சீஸ், சர்க்கரை சேர்க்கப்பட்டு செய்யப்படும். கேக், சீஸ் பன், டோனட், பப்ஸ் என்று பேக்கரி உணவுகள் கண்களுக்கும் நாவுக்கும் சுவையாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே அதிக இனிப்பு, கலோரிகள் மற்றும் டிரைசிகிளைரைடு கொண்டவை. உடலில் உள்ள கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை பேக்கரி உணவுகளுக்கு உண்டு.