முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

கூடுதல் உடல் எடை கொண்டிருப்பது அல்லது பருமனாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ராலை குறைக்க வழிவகுக்கும்.

  • 17

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    நம் உடலில் காணப்படும் பெரும்பாலான கொலஸ்ட்ரால் நம்முடைய கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. தவிர மீதமுள்ள கொலஸ்ட்ரால் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்து வருகிறது. ஹார்மோன்களை உற்பத்தி செய்ய, வைட்டமின் டி மற்றும் உணவு செரிமானத்திற்கு உதவும் கெமிக்கல்களை உற்பத்தி செய்ய நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    பெரும்பாலும் இதற்கு தேவையான அனைத்து கொலஸ்ட்ராலையும் நம் உடல் உற்பத்தி செய்கிறது. இந்த கொலஸ்ட்ரால்கள் நமது ரத்தத்தில் பயணிக்கின்றன மற்றும் லிப்போபுரோட்டின்ஸ் என குறிப்பிடப்படும் பாக்கெட்ஸ்களில் தொகுக்கப்படுகிறது. இதய நோய் மற்றும் ஹார்ட் அட்டாக் அபாயத்தை ஹை கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்கின்றன. மருந்துகள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவினாலும், முக்கியமான சில வாழ்க்கை முறை மாற்றங்கள் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கணிசமாக குறைக்க உதவும். கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவும் எளிதான டிப்ஸ்கள் கீழே..

    MORE
    GALLERIES

  • 37

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் : சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு நுகர்வை குறைத்து கொள்ள வேண்டும். அதே போல ட்ரான்ஸ் ஃபேட்ஸ்களை (Trans Fats) தவிர்க்க வேண்டும். ட்ரான்ஸ் கொழுப்புகள் சில சமயங்களில் உணவு லேபிள்களில் "Partially hydrogenated vegetable oil," என்று பட்டியலிடப்படுகின்றன. ட்ரான்ஸ் கொழுப்புகள் பெரும்பாலும் Margarine மற்றும் கடையில் வாங்கும் குக்கீஸ்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்த A2 பசு நெய், சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். கரையக்கூடிய நார்ச்சத்துகள் (Soluble fibers ) கொண்ட உணவுகளை சேர்த்து கொள்வது உங்கள் ரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதை குறைக்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    தினசரி ஒர்கவுட் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 - 6 நாட்களாவது ஒர்க்கவுட் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது கொலஸ்ட்ரால் லெவலை கன்ட்ரோல் செய்ய உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    புகைப்பழக்கத்தை நிறுத்துங்கள் : புகைப்பிடித்தலுக்கும் ஹைகொலஸ்ட்ராலுக்கும் ஆபத்தான தொடர்பு இருக்கிறது. புகைப்பழக்கம் உங்கள் LDL கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் HDL அதாவது நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். எனவே புகைப்பழக்கம் இருந்தால் அதை கைவிடுவது சிறந்தது.

    MORE
    GALLERIES

  • 67

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    ஆரோக்கியமான உடல் எடை : கூடுதல் உடல் எடை கொண்டிருப்பது அல்லது பருமனாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ராலை குறைக்க வழிவகுக்கும். இருக்கும் இடையிலிருந்து 5% முதல் 10% வரை எடையை இழப்பது கூட ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 77

    இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் கொலஸ்ட்ராலை ஈசியாக குறைச்சிடலாம்..!

    மதுவை தவிர்க்கவும் : உங்களுக்கு மது பழக்கம் இருந்தால் முடிந்த வரை முற்றிலும் கைவிட முயற்சி செய்யவும். இல்லை என்றால் மிதமான அளவில் மது அருந்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருக்கும் அனைத்து வயதினர், பெண்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு நாளைக்கு 1 ட்ரிங்க் வரையிலும், 65 வயது மற்றும் அதற்கும் குறைவான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2 ட்ரிங்க்ஸ் வரையிலும் அருந்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு கடும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES