உடலில் கொழுப்பு மிகுதியாக இருந்தால், உடல் இயக்கம் பாதிக்கப்படுவதோடு, நாளடைவில் அது ஹார்ட் அட்டாக் போன்ற முக்கியமான பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயம், அதிக கொழுப்பை நாம் கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்கு திடீர் பிரச்சினைகளை அது உருவாக்கும். அதே சமயம், நம் உடலில் கொழுப்பு அதிகமாக சேராமல் இருக்க வாழ்வியலில் சில எளிமையான பழக்க, வழக்கங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.
ஆரோக்கியமான உணவு : ஆரோக்கியமான உணவு உண்பதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள வேண்டாம். கொழுப்பு அளவை குறைக்க ஆரோக்கியமான உணவு மிக முக்கியமானதாகும். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொறித்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதய நலனிற்கு உகந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து கொண்ட உணவுப் பொருள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது உடலில் கொழுப்பு சேரவும், உடல் பருமன் அதிகரிக்கவும் வழிவகை செய்யும்.
உடற்பயிற்சி கட்டாயம் : குறிப்பிட்ட சில வயதிற்குப் பிறகு உடற்பயிற்சி அவசியமில்லை என நினைக்காதீர்கள். வயது அதிகரிக்கும் போது தான், நாம் இன்னும் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜிம் செல்ல முடியாவிட்டாலும் ஜாக்கிங், ரன்னிங், வாக்கிங் அல்லது சைக்கிளிங் போன்ற எளிய பயிற்சிகளை செய்யலாம்.
எடை தூக்கும் பயிற்சி : 18 வயது முதல் 30 வயதான வயதுப் பிரிவினரில் ஆய்வு செய்ததில் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இயக்கமின்றி அமர்ந்திருக்கும் நபர்களைக் காட்டிலும், எடை தூக்கி உடற்பயிற்சி செய்பவர்களின் உடலில், நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஹெச்டிஎல் கொழுப்பு உடலுக்கு நல்லது என்றாலும் கூட, அதுவும் அளவில் அதிகமாக இருப்பது நல்லதல்ல.
புகை பிடிப்பதை தவிர்க்கவும் : தன் நலனுக்கும், பிறர் நலனுக்கும் கேடு செய்யும் வகையில் ஒருவர் செய்யும் பழக்கம் இது தான். புகைபிடிப்பதால் நுரையீரல் நேரடியாக பாதிக்கப்படாது. ஆனால், அது நிச்சயமாக இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. சிகரெட் பிடிப்பவர்கள் அல்லது 5 கப் அளவிற்கு காஃபி அருந்துபவர்களின் உடலில் கெடுதல் செய்யும் எல்டிஎல் வகை கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.