சுயமாக கிளம்பும் எதிர்மறை சிந்தனைகள் : முன்னெச்சரிக்கை என்ற பெயரில் எப்போது எதிர்மறையாக பேசிக் கொண்டிருக்கும் நபர்களை பார்த்துள்ளீர்களா? திடீரென்று இந்த பேருந்து கவிழ்ந்தால் என்னாவது? இப்போது இந்த கட்டடம் இடிந்து விழுந்தாலும் விழுந்துவிடும் என்ற ரீதியில் இவர்களது பேச்சு அமையும். இதுபோன்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களுக்கும் இருந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிக கிளைசமிக் உடைய உணவுகள் : உணவுக்கும், மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக உள்ளது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கக் கூடிய பிரெட், பாஸ்தா, உருளைக் கிழங்கு, அரிசி சாதம், சர்க்கரை, ஜூஸ் போன்றவை அதிக கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகள் ஆகும்.