

மற்ற உடல் உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல், அணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் கொடுக்க வேண்டும். பொதுவாக, ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். ஆணுறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சைகளால் ஏற்படும் பால்வின் தொற்றுநோய்களுக்கு உள்ளாக நேரிடும்.


ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளும்பட்சத்தில் தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன், உடலுறவில் கிடைக்கக்கூடிய நிறைவான மகிழ்ச்சியையும் அணுபவிக்கலாம். இல்லையென்றால், உடலுறவில் நாட்டமின்மை ஏற்படுவதுடன், தேவையற்ற பால்வினை தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவீர்கள்.


உலர்வாக வைத்தல் : ஆணுறுப்பை உலர்வாக வைத்திருக்க வேண்டும். காற்றோட்டம் குறைவாக இருக்கக்கூடிய பகுதி ஆணுறுப்பு என்பதால், குளித்த பிறகு அந்த இடத்தை ஈரப்பதம் இல்லாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈரம் இருந்தால் பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஆண்குறியில் அதிக தொற்றுகள் உருவாகும் என்பதால், அந்த பகுதியை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். உடலுறவுக்கு முன்னும், பின்னும் ஆணுறுப்பை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


ஆணுறுப்பு சுத்தம் : ஆணுறுப்பை ஆன்றாடம் இருமுறையாவது சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சிறுநீர் கழிக்கும்போது, சில சொட்டு திரவங்கள் ஆணுறுப்பு தோல்களில் தங்கியிருக்கும். அதனால், அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசும். இதனை சரியாக கவனித்து முறையாக கழுவ வேண்டும். மேலும், இரண்டு வாரங்கள் அல்லது மாதம் ஒருமுறையாவது ஆணுறுப்பில் இருக்கும் முடிகளை சுத்தம் செய்துவிட வேண்டும். ஆணுறுப்பு சுகாதாரம், உடலில் உள்ள பி.எச் அளவில் சமநிலையை கொண்டு வரும். எஸ்.டி.டி அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


சரியான உள்ளாடை : ஆணுறுப்பு சுகாதாரத்தில் உள்ளாடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்கு பொருந்தாத சில ஆடைகளை அணியும்போது ஆணுறுப்பில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜீன்ஸ் பேன்ட் -உடன் உள்ளாடை அணிந்தால், ஆணுறுப்பு பகுதி மிகவும் இறுக்கமாக இருப்பதுடன், காற்றோட்டம் இல்லாமல் பூஞ்சைகள் தொற்றுகள் உருவாகிவிடும். தொடர்ந்து இதனை கவனிக்காமல் விட்டால் மிகப்பெரிய உடல்நிலை கோளாறுகளுக்கும் வழிவகுத்துவிடும். இலகுவான உள்ளாடைகளை தேர்வு செய்து அணிவது ஆண்களுக்கு நல்லது. செய்யும் வேலை, இடங்களுக்கு தகுந்தவாறு உடைகளை அணியக் கற்றுக்கொள்ளுங்கள். உடையை இறுக்கமாக அணிந்தால், ஆணுறுப்பில் வெப்பம் அதிகரித்து எரிச்சல் மற்றும் அரிப்புகளும் ஏற்படும்.


உடலுறவுக்கு முன் செய்ய வேண்டியவை : உடலுறவுக்கு முன் ஆணுறுப்பை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக, ஆணுறுப்புக்கு கீழாக இருக்கும் பகுதிகளை சுத்தமாக்க வேண்டும்.


ஆணுறுப்பில் முடிகள் அதிகம் சேராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். முடி இருந்து ஒருமுறைக்கு இருமுறை நன்கு சுத்தம் செய்யுங்கள்.


அந்தரங்க உறுப்பில் துர்நாற்றம் வீசக்கூடாது, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களினால் அரிப்பு ஏற்படக்கூடாது


பார்ட்னருடன் பகிர்ந்து கொள்ளுதல் : எஸ்.டி.டி என்படும் பாலியல் தொற்று மூலம் ஏற்படும் நோய்கள் குறித்து உடலுறவு கொள்பவருடன் அல்லது பார்டனருடன் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். இருவருக்கும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லையென்றால் ஒருவருக்கு இருக்கும் நோய் பாதிப்பு உடலுறவு கொள்ளும்போது மற்றவருக்கும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆண்குறியில் சிவத்தல், கொப்பளம், தொடை, கால் மற்றும் மூட்டுகளில் வலி ஆகியவை பால்வினை நோய்களுக்கான அறிகுறிகளாகும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால், விபரீதங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.