முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடலை கட்டாக வைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் புரதம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக பின்பற்றுகின்றனர்.

 • 18

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து (Protein) ஆகும். புரதமானது தசைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் புரோட்டின் சத்து மிகவும் அவசியமானது. புரதங்களின் உட்கொள்ளல் மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் உள்ள திருப்தி மையத்தை தூண்டுவதால், இது முழுமையான உணர்வை உருவாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடலை கட்டாக வைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் புரதம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக பின்பற்றுகின்றனர். இதனால் உணவு உட்கொள்ளல் குறைகிறது மற்றும் தற்காலிகமாக எடை இழக்கிறார்கள். அதேபோல உடல் பருமனை குறைக்க, பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலை விட அதிகமான அளவில் புரதத்தை உட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய உணவு முறைகள் நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் உயர் புரதங்களை எடுத்துக்கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.

  MORE
  GALLERIES

 • 38

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  1. எலும்பு கோளாறுகள்: என்.சி.பி.ஐ வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2013ம் ஆண்டு அயோனிஸ் டெலிமரிஸ் (Ioannis Delimaris) என்பவர் நடத்திய ஆய்வில், அதிக புரதம், குறிப்பாக இறைச்சி மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் அதிக புரத உணவுகள் உடலில் அதிக அமிலத்தை உருவாக்கி, கால்சியத்தின் அதிகப்படியான இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் நமது எலும்புகள் பாதிக்கப்படுகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவே காய்கறி புரதத்தை உட்கொள்வது எலும்பு இழப்பு மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கும் என்றும் இது சிவப்பு இறைச்சி நுகர்வுடன் தொடர்புடையது என்றும் கண்டறியப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 48

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  2. இதய நோய்கள்: அதிக இறைச்சி புரத உட்கொள்ளல் கரோனரி இதய நோய் (coronary heart disease -CHD) சாத்தியத்தை உயர்த்துமாம். குறிப்பாக இந்த உணவுகள் பெண்களிடையே அதிக இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கண்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, மீன், கோழி, குறைந்த கொழுப்புள்ள பால் தயாரிப்பு மற்றும் நட்ஸ் போன்ற பிற புரத மூலங்களின் நுகர்வு CHD நோயை ஏற்படுத்தும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

  MORE
  GALLERIES

 • 58

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  3. சிறுநீரக பிரச்சினைகள்: பல ஆய்வுகள் அதிக புரத உணவுக்கும் சிறுநீரக கல் உருவாவதற்கான ஆபத்துக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளன. ஹார்வர்ட் ஹெல்த் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்த இறைச்சி புரத நுகர்வுடன் உயர்ந்து சிறுநீரக கற்களை உருவாக்குவதை ஊக்குவிக்கக்கூடும். சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்கள் முழுமையான சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க குறைந்த புரதம், தாவர அடிப்படையிலான உணவை சாப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  4. புற்றுநோய் அபாயங்கள்: சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை எழுப்புகிறது அதிலும் குறிப்பாக ஆண்களில் என்று பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த ஆய்வின்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்களுக்கு ஆபத்து அதிகம். இவை மார்பகம், குடல் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க இறைச்சி மூலம் அதிகளவு புரதத்தை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இறைச்சியில் காணப்படும் ஹார்மோன்கள்,கொழுப்புகள் தான் இதற்கு காரணம்.

  MORE
  GALLERIES

 • 78

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  5. வயிற்றுப்போக்கு: அதிகளவு பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது உங்கள் உடலில் நார்ச்சத்துக்களின் அளவை குறைக்கும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். உங்கள் உடலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும்போது நீங்கள் அதிக புரோட்டின் உள்ள உணவுகளை சாப்பிடுவது நிச்சயம் உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க அதிக தண்ணீர் குடியுங்கள், சீரான அளவு நார்ச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  புரோட்டீன் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து... அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? 

  மேற்கண்ட ஆய்வுகளிலிருந்து, அதிக புரத உணவுகள் தசைக் வளர்ச்சி மற்றும் பசி கட்டுப்பாடு வடிவத்தில் குறுகிய கால நன்மைகளை வழங்கக்கூடும் என்று தோன்றுகிறது. இருப்பினும், நீண்ட காலத்திற்கு, பல உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாகும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

  MORE
  GALLERIES