ஒரு ஆணின் பாலியல் ஆரோக்கியம் என்பது பிற உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் போலவே, பல்வேறு வகையான நல்ல வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்புடைய வெப்சைட்டான மிஸ்டர்ஸ் (https://misters.in/en), ஆண்களின் பாலியல் ஆசையை சுற்றியுள்ள புதிய டேட்டா குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எல்லா ஆண்களிலும் 32%-க்கும் குறைவானவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர் மற்றும் தங்கள் பாலியல் ஆசைகளை அனுபவிக்கின்றனர்.
ஆனால் 10%-க்கும் அதிகமான ஆண்கள் அதை ஒருபோதும் அனுபவிப்பதில்லை என்று கூறி உள்ளது. மிஸ்டர்ஸ் என்பது குர்கானை தளமாகக் கொண்ட உடல்நலம் மற்றும் ஆயுர்வேத, அலோபதி மற்றும் தாவர அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்தி ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை பூர்த்தி செய்து வரும் நிறுவனம் ஆகும். Misters.in நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் மிஸ்ரா, சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை பெறுவதற்கான சில வழிகளை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் செல்லும் சில உன்னதமான வழிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள்: Misters வெளிப்படுத்தி உள்ள தகவல்களின் படி, சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நல்ல தூக்கம் கொண்ட 31.7% மக்களுக்கு அதிக விறைப்புத்தன்மை இருக்கும் அதே நேரத்தில், இரவில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் 18% பேருக்கு மட்டுமே அவர்களின் விறைப்புத்தன்மை குறித்து இதே போன்ற நம்பிக்கை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாத ஆண்களில் 19.5% பேர் விந்து வெளியேறுவதில் சிறப்பான அனுபவம் இருப்பதாக கூறும் அதே நேரத்தில், சில உடற்பயிற்சிகளை வழக்கமாக செய்து வரும் ஆண்களில் 27% பேர் (7.5% கூடுதல் நபர்கள்) உடலுறவு காலத்தில் விந்து வெளியேற்றம் தாங்கள் எதிர்பார்க்கும் வகையில் சிறப்பாக இருப்பதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எனவே இதன் மூலம் நல்ல தூக்கம் மற்றும் நாள் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்வது என்ற அனைத்து ஆரோக்கியத்திற்குமான பொதுவான அறிவுரை பாலியல் ஆரோக்கியத்திற்கும் பொருந்துவதாக கூறுகிறார் சுஹாஸ் மிஸ்ரா. சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். நல்ல தரமான தூக்கத்தை பெற அது மாதிரியான உடற்பயிற்சிகளை தேர்வு செய்து பழக்கப்படுத்தி கொண்டால் பலயில ஆரோக்கியத்தை மேம்படுத்த முதல்படியாக இருக்கும்.
பாலியல் ஆரோக்கியத்தின் நேரடி மற்றும் மறைமுக மேம்பாடுகளுக்கு அஸ்வகந்தாவை தவறாமல் சாப்பிடலாம். பாலியல் செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க செய்ய ஷிலாஜித் உதவுகிறது. இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைத்தொடர்களில் காணப்படுகின்ற, இயற்கையாகத் தோன்றுகின்ற ஒரு தாதுப்பொருளே ஷிலாஜித் ஆகும். தாவரங்கள் மற்றும் தாவர பாகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மட்கி, வேதிச்சிதைவு ஏற்படுவதால் உருவாகிற ஒரு அரிதான பிசின் என்றும் குறிப்பிட்டுள்ளார் சுஹாஸ் மிஸ்ரா.
யோகா: பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகளில் சில வகை யோகா பயிற்சிகளும் உதவுவதாக ஆயுர்வேத வல்லுநர்கள் கூறியுள்ளனர். கும்பகாசனா (Plank Pose), தனுராசனா (Bow Pose), உத்தனபதாசனா (Raised Leg Pose போன்ற சில யோக ஆசனங்கள் பாலியல் ஆரோக்கியத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையவை. ஆனால் இந்த ஆசனங்களை ஒரு நிபுணரால் வரையறுக்கப்பட்ட ஒரு விரிவான யோகா திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே முயற்சிக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் பாலியல் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.