அதிக கொலஸ்ட்ரால் என்றால் எப்படி இருக்கும்? நமது ரத்தத்தில் வேக்ஸ் போல உள்ள ஒரு பொருள் தான் கொலஸ்ட்ரால் ஆகும். இது உடலில் ஆரோக்யமான செல்களை கட்டமைக்க உதவுகிறது. பொதுவாக, உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய கொழுப்பு வகையை High Density Lipoprotein (ஹெச்டிஎல்) என்றும், உடலுக்கு தீமை பயக்கக் கூடிய கொழுப்பு வகையை Low Density Lipoprotein (எல்டிஎல்) என்றும் குறிப்பிடுகிறோம். நமது ரத்தத்தில் மிக அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் இருந்தால், ரத்த நாளங்களில் அது தட்டுக்களாக படியத் தொடங்கும். உடலின் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் செல்வதற்கு இது இடையூறாக இருக்கும் அல்லது முழுமையான தடையை ஏற்படுத்தும். ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த தட்டுக்கள் உடைந்து கட்டியாக அடைப்பதுதான் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற பாதிப்புகள் ஆகும். அதிக கொலஸ்ட்ரால் என்பது பொதுவாக எல்லோருக்கும் வரக் கூடியதுதான் என்றாலும், முறையான சிகிச்சை, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மூலமாக இதற்கு தீர்வு காண முடியும்.
பரிசோதனை அவசியம்: நாம் உணரும் வகையில் அறிகுறிகள் இருக்காது என்பதால், அவ்வபோது ரத்த பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது. உங்கள் வயது, உடல் எடை போன்றவற்றை பரிசீலனை செய்து, சில பரிசோதனைகளையும், மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். நாமும், நமது உணவுப் பழக்கம், வாழ்வியல் போன்றவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.