சுவாசம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.இது நம் உடலில் மிகவும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு செயலாகும். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலரும் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டனர். எப்போதும் சுவாசிப்பதை விட சிரமப்பட்டு சுவாசிப்பதால் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஒருவர் அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, அதிகமாக தூங்குவது இப்படி தேவைக்கேற்ப அதிகமாக நாம் செய்தாலும் ஆபத்து தான். அதே போல் தான் அதிகமாக சுவாசிப்பதும் நாம் உடலில் தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.சில நேரம் நீங்கள் சுவாசிப்பதில் பிரச்சனை இருந்தாலும் உங்களால் அதை உணரமுடிவதில்லை. எனவே சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதை வெளிகாட்டும் அறிகுறிகள் உங்களுக்காக இதோ..
சுவாசிப்பதில் பிரச்சனை : அதிக சுவாசம் அல்லது ஹைப்பர்வெண்டிலேட்டிங் என்பது நீங்கள் வழக்கத்தை விட அதிக ஆழமாகவும், வேகமாகவும் உள்ளிழுத்து சுவாசிப்பது ஆகும். பொதுவாக உங்கள் சுவாச விகிதம் நிமிடத்திற்கு 12 முதல் 16 சுவாசங்கள் வரை இருக்கும். உங்கள் சுவாச முறை மாறி, வழக்கத்தை விட அதிகமாக சுவாசிக்க தொடங்கும் போது, மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு , பதற்றம் மற்றும் மயங்கி கூட விழலாம்.இவை அதிகப்படியான சுவாசத்தின் சில அறிகுறிகளான உள்ளன.
நாம் அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் : சில நேரங்களில் உங்கள் சுவாசம் சரியான விகிதத்தில் இல்லை என்பதை நீங்கள் உணராத நேரங்களும் உள்ளன.உங்கள் வாயின் மூலம் மூச்சுவிடுவது, குறட்டை , கொட்டாவி, காலையில் எழுந்திருக்கும் போது உதடு மற்றும் வாயில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது இவை அனைத்துமே நீங்கள் அதிகமாக சுவாசிக்கிறீர்கள் என்பதை வெளிகாட்டும் அறிகுறிகளாகும்.
சுவாசிக்கும் போது வழக்கமாக ஆக்ஸிஜனை நாம் உள்ளே இழுத்து, கார்பன் டையாக்சைடை வெளியே விடுவோம். ஆனால் அதிகமாக சுவாசிக்கும் போது கார்பன் டையாக்சைடின் அளவு உடலில் அதிரித்து இரத்தத்தில் pH அளவு குறையக்கூடும்.நாம் சுவாசிப்பதற்கு தேவையானது ஆக்சிஜன் என்றாலும், CO2 இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்பன் டையாக்சைட் உடலில் அதிகரிப்பதே, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை விட நம்மை சுவாசிக்க தூண்டுகிறது.வாயின் மூலம் சுவாசிப்பது என்பது CO2 க்கு உங்கள் உணர்திறனை அதிகரித்து வேகமாக சுவாசிக்க தொடங்குவீர்கள். அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் நாசி சுவாசத்தை பரிந்துரைக்கின்றனர்.