முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

மழைக்காலம் தொடங்கினாலே பல்வேறு நோய் பாதிப்புகள் உண்டாக தொடங்கிவிடும்.

 • 16

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  மழைக்காலம் தொடங்கினாலே பல்வேறு நோய் பாதிப்புகள் உண்டாக தொடங்கிவிடும். குறிப்பாக இந்தியாவில் தற்போது மழைக்காலம் தொடங்கிய பிறகு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. பெரியவர்களை விடவும் குழந்தைகளை தான் இது அதிகம் பாதிக்கிறது. ஏடிஸ் கொசுக்களினால் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் உருவாகிறது. இது போன்று கொசுக்களினால் உண்டாகும் நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்க சுற்றுப்புறத்தை அவசியம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 26

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  குறிப்பாக வீடுகளுக்கு அருகில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் முழுக்கை கொண்ட உடைகளை அணிய வேண்டும். இப்படி பல்வேறு வழிமுறைகளை பின்பற்றிய பிறகும் கொசுக்களினால் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் அவற்றை விரைவில் குணப்படுத்த சத்தான உணவுகள், நல்ல ஓய்வு மற்றும் சில முக்கிய யோகாசனங்களை பின்பற்றுவது நல்லது. அவை என்னென்ன யோகாசனங்கள் என்பதை பற்றி இனி பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 36

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  வஜ்ராசனம்:டெங்குவை விரட்ட வஜ்ராசனத்தை செய்து வரலாம். இதற்கு முதலில் முட்டிகளை உட்புறமாக மடக்கி உட்கார்ந்து கொள்ளுங்கள். அடுத்து உங்களின் முதுகு பகுதியை நேராக வைத்து கொள்ளவும். பிறகு உங்களின் தலை மற்றும் கழுத்து பகுதியையும் நேராக வைக்கவும். இந்த ஆசான நிலையில் 10-15 நொடிகள் வரை அப்படியே இருங்கள். பிறகு இதை மீண்டும் செய்து வாருங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  மலாசனம்:இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் இரண்டு கால்களையும் அகட்டி வைத்து கொள்ளவும். பிறகு பாதியாக உட்காரும் நிலைக்கு செல்லவும். இந்த நிலையில் உங்களின் கால்களையும், முதுகையும், தோள்பட்டையையும் நேராக வைக்க வேண்டும். 15 நொடிகள் வரை இந்த ஆசன நிலையில் இருக்கலாம். உங்களின் பாதங்கள் தரையில் தட்டையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  பச்சிமோத்தாசனம்:உடலுக்கு சிறந்த நலனை தரும் ஆசனங்களில் ஒன்று பச்சிமோத்தாசனம். இதை செய்ய முதலில் சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பின் உங்களின் கால்களை நீட்டி கொள்ளவும். இந்த நிலையில் தலையை கீழ்நோக்கி தாழ்த்தி கொண்டு, கால்களை கைகளால் தொட வேண்டும். 10 நொடிகள் வரை இந்த ஆசன நிலையில் இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணம்பெற உதவும் 4 யோகாசனங்கள்..

  பிரமாரி பிராணாயாமம்:இந்த ஆசனத்தை செய்ய, முதலில் சம்மனம் போட்டு உட்காருங்கள். பிறகு முதுகை நேராக வைத்து கண்களை மூடி கொள்ளுங்கள். அடுத்து உங்களின் கட்டை விரலை கொண்டு காதுகளை மூடி கொள்ளவும். உங்களின் ஆள்காட்டி விரல் கண்களை மூடியவாறு இருக்க வேண்டும். நடுவிரலானது மூக்கின் இடையில் இருக்க வேண்டும் மற்றும் மோதிர விரலானது உங்களின் மூக்கின் நுனியில் இருக்க வேண்டும். இந்த ஆசனம் செய்யும்போது வாய் மூடிய நிலையில் இருக்கும்படி உறுதிப்படுத்தி கொள்ளவும். 10 நொடிகள் வரை இந்த ஆசன நிலையில் இருக்கலாம்.மேற்சொன்ன ஆசனங்களை டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் செய்து வந்தால் விரைவில் இதிலிருந்து குணம்பெறலாம்.

  MORE
  GALLERIES