உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு என பலர் பலவிதமான டிப்ஸ்களையும் ஹேக்குகளையும் பின்பற்றி வருகின்றனர். எடையை குறைக்கும் செயல்முறைகளில் ஈடுபடுபவர் கலோரிகள் குறைவாக இருக்கும் உணவைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். ஏனெனில் எடை குறைப்பு விஷயத்தில் கலோரிகள் முதல் மற்றும் முதன்மையான படியாகும். ஜிம்மிற்குச் செல்வதும், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதும் ஒருவரில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. இருப்பினும், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க மற்றொரு எளிதான வழியும் இருக்கிறது.
அது என்ன மற்றொரு வழி என்றால், நிறைய கலோரிகளை எரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதாகும். ஆம், இது போன்ற உணவுகள் 'எதிர்மறை கலோரிகள்' (negative calories) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை ஜீரணமாகும் போது ஒரு நபரின் கலோரிகளையும் சேர்த்து எரிக்கின்றன. மேலும் அந்த உணவுகள் கலோரி எரித்தல் செயல்முறையை விரைவுபடுத்துகின்றன.
கேரட்: கேரட்டில் பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பயனளிக்கின்றன. கேரட் எதிர்மறை கலோரி கொண்ட ஒரு உணவு ஆகும். ஒரு கிண்ணம் கேரட்டில் நாற்பத்தி ஒரு கிராம் கலோரி மட்டுமே உள்ளது. கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு கேரட் உதவுகிறது. முக்கியமாக கேரட் ஒருவரின் பார்வையையும் மேம்படுத்துகின்றன.
பெர்ரி: உங்கள் டயட்டில் பெர்ரிகளை சேர்ப்பது மிகவும் நல்லது. அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகள் என அனைத்து பெர்ரிகளிலும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்துள்ளன. அரை கப் பெர்ரிகளில் முப்பத்திரண்டு கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இது எதிர்மறை கலோரி உணவுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.
செலரி: நூறு கிராமுக்கு பதினாறு கிராம் கலோரிகளை கொண்ட செலரியில் செரிக்கப்படாத நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. செலரியில் இருந்து கிடைக்கும் பெரும்பாலான கலோரிகள் செல்லுலோஸாக சேமிக்கப்படுகின்றன. இது எடை இழப்புக்கான ஆரோக்கியமான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஏனெனில் செலரியில் இருப்பது தொண்ணூற்றைந்து சதவீதம் தண்ணீராகும்.