கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள், மருந்துகளுக்கு மாற்றாக ஆயுர்வேத பொருட்கள் இருக்க முடியாது என்றாலும், காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வரும் நன்மைகள் காரணமாக மக்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதத்தை ஏற்று கொண்டுள்ளனர். கோவிட் இன்னும் நீடிக்கும் நிலையில் இதன் பொதுவான அறிகுறிகளை கருத்தில் கொண்டு தலைவலி, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் கோவிட் இருந்தால் அதிலிருந்து மீள உதவும் சில ஆயுர்வேத தீர்வுகளை இங்கே காணலாம்.
துளசி: நாட்டில் மத ரீதியாக மிகவும் புனிதமாக கருதப்படும் துளசி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஜலதோஷத்திற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக செயல்படுகிறது. துளசிக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை காளான், ஆன்டிபுரோடோசோல், ஆண்டிமலேரியல், ஆன்டெல்மிண்டிக் உட்பட பல ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-காட்ரேக்ட், ஆன்டி-ஹைப்பர்டென்சிவ், ஆன்டி-ஸ்ட்ரெஸ், ஆன்டி-அல்சர் உள்ளிட்ட எண்ணிலடங்கா தனித்துவம் உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். சளி அதிகம் இருக்கும் போது தினமும் 3-4 துளசி இலைகளை எடுத்து கொள்வது நல்ல நிவாரணம் அளிக்கும்.
இஞ்சி: இஞ்சி-யில் உள்ள ஜிஞ்சரோல்ஸ் மற்றும் பாரடோல்ஸ் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளன. இதில் β-bisabolene, α-curcumene, zingiberene, α-farnesene மற்றும் β-sesquiphellandrene போன்ற பல டெர்பீன் காம்பவுன்ட்ஸ் உள்ளன. இவை வலுவான ஆக்ஸிஜனேற்றியாகவும் அதன் வலுவான நறுமணத்திற்கும் காரணமாக இருக்கின்றன. கோவிட் அறிகுறிகளில் இருந்து விடுபட உலர்ந்த இஞ்சியை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் ஆற வைத்து பருகலாம்.
திரிபலா: திரிபலா கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய 3 முக்கிய மூலிகைகளின் கலவை ஆகும். திரிபலா பொடியாகவும், மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. பொடியை சுடுநீரில் கலந்து பருகலாம். ஏனெனில் நல்ல குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன் எடுத்து கொள்வது, திரிபலா சாப்பிடுவதற்கான சிறந்த வழி.
திரிகடுகம்: சளி மற்றும் தொண்டை வலியை போக்க மற்றொரு பயனுள்ள ஆயுர்வேத தீர்வு சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய சிறந்த 3 மூலிகைகளின் கலவையான திரிகடுகம் ஆகும். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கலவை இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு உள்ளிட்டவற்றை குணமாக்கும். பலவித நோய்களுக்கும் தீர்வாக திரிகடுகம் இருக்கிறது.
மஞ்சள்: 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிட் பரவ துவங்கிய போது மருத்துவ துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. ஏனென்றால் நோய் புதிது என்பதால். கோவிட்டின் துவக்க காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை முயற்சிக்குமாறு சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியது. அத்தகைய மருந்துகளில் ஒன்று பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது. சளி பிடித்தால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த பால் மற்றும் மஞ்சள் கலவையானது சிறந்த பலனை தருகிறது.
ஹெர்பல் டீ: பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே,வைரஸுக்கு எதிராக தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்தியர்கள் தினமும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெர்பல் டீ குடித்து வந்தனர். பொதுவாக துளசி, இலவங்கப்பட்டை, பிளாக் பெப்பர், சுக்கு உள்ளிட்ட பல பொருட்களை பயன்படுத்தி மூலிகை தேனீரை தயார் செய்து தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும்.