முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

Migraines Headaches | மோஷன் சிக்னஸ் என்பது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் மற்றொரு முக்கிய காரணியாகும், எனவே நீங்கள் கார், விமானம், ரயில் அல்லது படகில் சுற்றித் திரிந்தால், மோஷன் சிக்னல் நோயைத் தடுக்க மருந்துகளை உங்களுடன் எடுத்துக் கொள்ளவது நல்லது.

 • 110

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  ஜாலியா ஊர் சுத்துவது என்பது யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் சில சமயங்களில் டிராவலின் போது ஏற்படும் ஒற்றைத் தலைவலி ஒட்டுமொத்த ஜாலி மைண்ட்டையும் கெடுத்து விடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. விமானங்கள், ரயில்கள், படகுகள் அல்லது கார்களில் சவாரி செய்வதால் ஏற்படும் மோஷன் நோய் ஒற்றைத் தலைவலி உருவாக காரணமாகிறது. மேலும் இறுதி சேர வேண்டிய இடத்திற்கு நேரம் காலத்துடன் சென்று சேர வேண்டும் என்ற பதற்றமும் தலைவலியை கொண்டு வரலாம்.
  பயணங்களின் போது திடீரென ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க ஈஸியான 10 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 210

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  நல்ல தூக்கம் அவசியம்: டிராவலுக்கு முதல் நாள் இரவு நன்றாக உறங்கவில்லை என்றாலும் அது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். எனவே பயணத்திற்கு முந்தைய நாள் இரவில் போதுமான அளவு உறங்குவது அவசியம். அதற்காக கும்பகர்ணனுக்கே டப் கொடுக்கும் விதமாக அதிக நேரம் ஆழ்த்து உறங்கினால், உங்களுடைய ஜாலி டிரிப் பிளான் காலியாக வாய்ப்புள்ளதையும் நினைவில் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 310

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  சரியாக சாப்பிடுங்கள்: புதிய இடங்களுக்குச் செல்லும் போது, சுற்றுலா பயணிகள் அனைவருமே விரும்புவது உள்ளூர் உணவுகளை சுவைத்துப் பார்க்க வேண்டும் என்பது தான். அதே சமயம் சாக்லேட், பாலாடைக்கட்டி, ரெட் ஒயின், சிட்ரஸ், சோயா சாஸ், செயற்கையாக தயாரிக்கப்பட்ட இனிப்புகள் ஆகியவை உங்களுக்கு ஒற்றைத் தலைவலியை கொண்டு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவை மாற்றுவது அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதும் தலைவலியைத் தூண்டும்.

  MORE
  GALLERIES

 • 410

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்: பயணத்தின் போது பெரும்பாலானோர் சிறுநீர் உபாதையை கழிக்க இடம் கிடைக்காது என்ற காரணத்தால், தண்ணீர் குடிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, ஒற்றைத் தலைவலியை கொண்டு வருகிறது. வெப்பமான காலநிலையில் நேரத்தை செலவழித்தால், அல்லது ஹைகிங், பனிச்சறுக்கு அல்லது நீச்சல் போன்ற தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 510

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  எதிலும் அளவை மிஞ்சாதீர்கள்: நீங்கள் பிசினஸ் ட்ரீப், இன்பச்சுற்றுலா அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களை காண ஊருக்குச் செல்கிறீர்கள் என்றால் ஓவர் உற்சாகத்தில் மது மற்றும் இனிப்புகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில் இவையும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கும் காரணிகள் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES

 • 610

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  சாத்தியமான அபாயங்களை தவிருங்கள்:ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படும் நபர்கள் பொதுவாக பிரகாசமான அல்லது ஒளிரும் ஒளி, அதிக வெப்பம் அல்லது குளிர், உரத்த சத்தம் மற்றும் கடுமையான நாற்றங்களுக்கு உணர்திறன் உடையவர்கள். இத்தகைய வெளிப்புறங்களுக்குச் செல்வதை தவிர்க்க அல்லது குறைக்க முயல்வது நல்லது. சன்கிளாஸ்கள், ஸ்லிப்பிங் மாஸ்க், காது ஒலி தடுப்பான் போன்றவற்றை எடுத்துச் செல்வது நல்லது. விமான பயணங்களின் போது ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்க நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் குறித்தும் உங்களுடைய மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 710

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  புகையிடம் சிக்காமல் தப்பியுங்கள்: நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கிறீர்கள் என்றால், உணவகங்கள், பார்கள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட பல பொது மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் புகைபிடித்தல் இன்னும் அனுமதிக்கப்படுகிறது. சிகரெட் புகை ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே புகைபிடிக்காத அறைகள், வாடகை கார்கள் மற்றும் ரயில் மற்றும் பேருந்துகளில் இருக்கை வசதிகளை கேட்டுப் பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 810

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  வாகன இயக்கத்தை கவனத்தில் கொள்ளுங்கள்: மோஷன் சிக்னஸ் என்பது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் மற்றொரு முக்கிய காரணியாகும், எனவே நீங்கள் கார், விமானம், ரயில் அல்லது படகில் சுற்றித் திரிந்தால், மோஷன் சிக்னஸ் நோயைத் தடுக்க மருந்துகளை உங்களுடன் எடுத்துக் கொள்ளவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 910

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  மாற்றத்திற்கு தயாராக இருங்கள்: காலநிலை மாற்றம் அல்லது தீவிர வானிலை மாற்றத்தை அனுபவிப்பதற்காக நீங்கள் வெகுதூரம் பயணிக்கிறீர்கள் என்றால், வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது பாரோமெட்ரிக் அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் என்று தேசிய ஒற்றைத் தலைவலி மையம் கூறுகிறது. கூடுதலாக, நீங்கள் ஆழ்கடல் டைவிங் அல்லது பனிச்சறுக்கு அல்லது அதிக உயரத்தில் பனிச்சறுக்கு செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 1010

  டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!

  உங்கள் மருந்துகளை மறந்துவிடாதீர்கள்:நீங்கள் ஏதாவது மருந்துகளை ரெகுலராக எடுத்துக் கொண்டிருந்தாலோ, ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உங்களுக்கு ஏதேனும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலோ பயணத்தின் போது மறக்காமல் அதனை எடுத்துச் செல்லுங்கள்.
  நீங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், பயணத்தின் போது உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரலாம். இது நடந்தால், நீங்கள் நன்றாக உணரும் வரை தனியாக இருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.

  MORE
  GALLERIES