இதய செயலிழப்பு பற்றி இப்படியெல்லாம் சொன்னா நம்பாதீங்க... கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!சில ஆண்டுகளுக்கு முன் வரை மாரடைப்பு என்பது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்களில் தான் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் கூட மாரடைப்பால் அதிகமாக இறந்து போகிறார்கள். இதய நோய்கள் மற்றும் திடீரென்று மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமில்லாத உணவுகள் தான்.
அதே போல, கோவிட் தொற்று காலத்தில், தொற்று பாதித்தவர்கள் இணை நோய்களால் அதிகமாக அவதிப்பட்டு வருகிறார்கள். அதில், இதய நோய்களும் அடங்கும். கோவிட் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவர்களில் கூட சில மாதங்களில் இணை நோய் பாதிப்பால் இதயம் செயலிழந்து போவது முதல் மாரடைப்பு வரை ஏற்பட்டுள்ளது. எனவே ஹார்ட் ஃபெயிலியர் என்று கூறப்படும் இதய நோய் பற்றி முழுமையான மற்றும் உண்மையான விவரங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
ஹார்ட் ஃபெயிலியர் என்பது மாரடைப்பு இல்லை : ஹார்ட் அட்டாக் வேறு, ஹார்ட் ஃபெயிலியர் வேறு. இதயம் செயலிழப்பு என்பது உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலை ஆகும். மற்றொரு விதமான இதய பாதிப்பு என்பது இதய தசைகள் இறுக்கமாகி, இதயத்தில் இருந்து ரத்தம் மற்றும் ஆக்சிஜன் பம்ப் செய்வது பாதிப்பது கடினமாகும். ஆனால், மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் என்பது, இதயத்துக்கு ரத்தம் வருவதைத் தடுக்கும் ப்ளாக்கேஜைக் குறிக்கிறது.
எந்த அறிகுறிகளும் இல்லை : இதயம் செயலிழப்புக்கு எந்த அறிகுறியும் இல்லை, உடனடியாக தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இதயத்திலிருந்து அனுப்பப்படும் ரத்தம் வெளியேறுவதில் தான் பாதிப்பு இருப்பதால், இதற்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், கால்களில் வீக்கம், உடற்பயிற்சி செய்யும் போது அல்லது மாடிப்படியில் ஏறும் போது மூச்சடைப்பு மற்றும் மிகவும் சிரமப்படுவது, ஆகியவை உடலுக்கு தேவையான ரத்தம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும்.
இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை : இதயம் செயலிழப்புக்கு சிகிச்சை இல்லை. இதயம் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே, இதயம் செயலிழப்பு என்பது வாழ்க்கையின் முடிவல்ல. என்ன காரணத்தால் இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, இதயத் தசைகள் அல்லது வால்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான சிகிச்சைகள் உள்ளன.