முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

ஹார்ட் அட்டாக் ஏற்படும் முன்பாக ஒரு நபரின் சருமத்தில் மாற்றம் தென்படும். வெளிர் நிறம் மற்றும் க்ரே நிறம் கொண்டதாக சருமம் மாறும்.

 • 16

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  ஹார்ட் அட்டாக் என்றால் அதற்கான பிரதான அறிகுறியாக நெஞ்சுவலி ஏற்படும் என்று நாம் எல்லோருமே கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவோம். இதயத்திற்கான ரத்த ஓட்டம் தடைபடுகின்றபோது, இந்த நெஞ்சுவலி ஏற்படுகிறது. எனினும் ஹார்ட் அட்டாக் என்றால் இது ஒன்றுதான் அறிகுறி என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக ஏற்கனவே உடல் ரீதியாக வேறு வகையான தொந்தரவுகள் இருப்பின், ஹார்ட் அட்டாக் ஒரு சைலண்ட் கில்லர் போல தாக்கிவிடும். ஆக, இதற்கான வேறு அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 26

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  பிற அறிகுறிகள் : ஹார்ட் அட்டாக் ஏற்படும் முன்பாக ஒரு நபரின் சருமத்தில் மாற்றம் தென்படும். வெளிர் நிறம் மற்றும் க்ரே நிறம் கொண்டதாக சருமம் மாறும். இது தவிர மிகக் கடுமையாக வியர்த்துக் கொட்டும். குமட்டல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதேபோல, கவலை, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

  MORE
  GALLERIES

 • 36

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  பாலின அடிப்படையிலான அறிகுறிகள் : ஆண்களைப் பொருத்தவரையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறி நெஞ்சுவலி ஆகும். எனினும் பெண்களுக்கு கூடுதல் அறிகுறிகள் ஏற்படுகின்றன. உடல் சோர்வு அல்லது கழுத்து மற்றும் தாடைப்பகுதியில் வலி போன்றவை ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறிகள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 46

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  சைலண்ட் ஹார்ட் அட்டாக் : நீரிழிவு போன்ற நோய்கள் காரணமாக ஹார்ட் அட்டாக் ஒரு சைலண்ட் கில்லர் போல உருவெடுத்து வரும். மேலும், சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் நீங்கள் சந்தேகம் அடையத் தகுந்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. சாதாரண நெஞ்செரிச்சல் அல்லது வெறுமனே நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு குளிர்ச்சியான வியர்வை, கழுத்து, தாடையில் வலி, இடது தோள்பட்டையில் வலி போன்றவை ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 56

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  உணவுக் கட்டுப்பாடு : ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நீண்ட காலத்திற்கு ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் தடுக்க முடியும். வண்ண, வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை மிகுதியாக உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் போன்றவை அடங்கியுள்ளன. அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை தடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  நெஞ்சுவலி மட்டுமல்ல... இந்த அறிகுறிகள் இருந்தாலும் அது ஹார்ட் அட்டாக்தான்..!

  தினசரி பயிற்சி அவசியமானது : நீங்கள் தினசரி ஜிம்முக்கு செல்லவில்லை என்றாலும் கூட, உடல் இயக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. தினசரி 30 முதல் 60 நிமிடம் வரையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். விறுவிறுப்பாக நடப்பது, வீட்டு வேலைகளை ஒன்றுவிடாமல் செய்து முடிப்பது போன்றவை பலன் தரும்.

  MORE
  GALLERIES