முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

சங்கடத்தை ஏற்படுத்தும் தொப்பையை குறைக்க நீங்கள் தினமும் இந்த பானங்களை குடித்து வாருங்கள். இவை உடல் கொழுப்பை வேகமாக குறைத்து வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் என்கின்றனர்.

  • 16

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    கட்டுப்பாடில்லாத உணவு முறை, கொழுப்பு நிறைந்த உணவு, கண்ட நேரத்தில் உணவு என உணவுக்கான வரம்புகளை பின்பற்றாத வாழ்க்கைமுறை பலரையும் உடல் பருமன், தொப்பை என ஓட வைத்துள்ளது. எதை சாப்பிட்டால் சரியாகும், எதை செய்தால் குறைக்கலாம் என இப்போது ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையோடு செயல்படுகின்றனர். எனவே உடற்பயிற்சி , டயட் போன்ற முறைகளை பலரும் இப்போது அன்றாட வாழ்க்கை முறையின் ஒன்றாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் சங்கடத்தை ஏற்படுத்தும் தொப்பையை குறைக்க நீங்கள் தினமும் இந்த பானங்களை குடித்து வாருங்கள். இவை உடல் கொழுப்பை வேகமாக குறைத்து வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    மஞ்சள் டீ : மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பண்பு கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதோடு பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டீன் , நார்ச்சத்து போன்றவையும் இருப்பதால் எடை குறைப்புக்கு விரைவில் பலன் தரும். குர்குமின் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இந்த டீயை தயாரிக்க 2 கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பின் அதை ஒரு கிளாஸில் தேவையான அளவு ஊற்றில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கால் ஸ்பூன் சேர்த்து கலக்குங்கள். பின் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் , தேன் சுவைக்கு ஏற்ப கலந்து 2 நிமிடம் மூடி வையுங்கள். 2 நிமிடம் கழித்து அதை பருகலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    இஞ்சி டீ : இஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் என்பதால் எடை இழப்புக்கு சிறந்த பானமாக இருக்கும். 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சி தட்டி போடுங்கள். நன்கு கொதித்த பின் அதை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பருகலாம். தேவைப்பட்டால் புதினா இலைகளையும் சேர்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    லெமன் டீ : இன்று பலரும் லெமன் டீக்கு மாறியுள்ளனர். இது அதிக கொழுப்பை குறைக்க உதவுவதால் இதை நீங்களும் பருகலாம். 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கிய பின் அதில் எலுமிச்சை சாறு பிழ்ந்து தேன் மற்றும் புதினா இலைகள் சேர்த்து பருகலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    பட்டை டீ : பட்டை உடல் எடையை குறைப்பதில் பெயர் பெற்றது. கொழுப்பை வேகமாக குறைப்பதில் சிறந்தது என்பதால் பலரும் பட்டையை கொதிக்க வைத்து குடிப்பார்கள். நீங்களும் தண்ணீரை கொதிக்க வைத்து அதை இறக்கியதும் உடனே பட்டை துண்டுகள் அல்லது பொடியை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடங்கள் மூடி வையுங்கள். பின் அதில் தேன் கலந்து பருகலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    உங்க தொப்பை வயிறு பானை போல பெருசா இருக்கா..? தினமும் இதை குடிங்க ரிசல்ட் தெரியும்..!

    கிரீன் டீ : கிரீன் டீ சமீப காலமாக பலரும் உடல் எடையை குறைக்க குடித்து வருகின்றனர். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. அதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிப்பதால் எடை குறைக்க உதவுகிறது. தினம் ஒரு கப் கிரீன் டீ உங்கள் தொப்பையை குறைக்க உதவும்.

    MORE
    GALLERIES