டிடாக்ஸ் பானங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான செரிமான அமைப்பு அவசியம், இந்த டிடாக்ஸ் பானங்கள் சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் டிடாக்ஸ் பானங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், வளர்சிதை மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கவும் உதவுகின்றன. நீரேற்றமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் கலோரி உட்கொள்ளல் குறைவாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த 6 டிடாக்ஸ் பானங்களை அருந்துங்கள்.
இலவங்கப்பட்டை , தேன் : அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அனைத்தும் இலவங்கப்பட்டை , தேனில் உள்ளன. உறங்குவதற்கு முன் தேனை உட்கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க உதவும். மேலும் உங்கள் பசியை அடக்கி உடல் எடையை குறைக்க உதவும் அத்தியாவசிய ஹார்மோன்கள் தேனில் உள்ளது, இலவங்கப்பட்டை கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகளை கொண்டுள்ளது.
வெட்டிவேர் : வெட்டிவர் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் வெட்டிவேர்களை சேர்த்து சற்று கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அருந்த வேண்டும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும். இது உடல் எடையை குறைக்கவும், நரம்புகளை அமைதிப்படுத்தவும், தூக்கமின்மையை போக்கவும் சிறந்தது. மேலும் தோல் மற்றும் கல்லீரலுக்கும் நன்மை பயக்கும்.
வெந்தயம் : வெந்தயத்தில் இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் B6, புரதம் மற்றும் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி எடையை குறைக்கிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடிக்கவும்.
சீரகம் : சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்களில் அதிகமாக உள்ளது. எனவே சீரகம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க சீரகம் உதவுகிறது. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அருந்த வேண்டும். இதில் செரிமானத்திற்கு உதவும் நொதிகள் நிறைந்துள்ளது மற்றும் அதன் விளைவாக எடை குறைகிறது என்று நம்பப்படுகிறது. கோடை காலத்தில் செரிமான பிரச்சனை அதிகரிக்கிறது, அதிலிருந்து விடுபட ஜீரக தண்ணீர் உதவுகிறது.