பீட்ஸா, ஐஸ் க்ரீம் போன்ற நாவை கட்டிப் போடும் உணவுப் பொருட்களின் சுவை மற்றும் ஆனந்தம் குறித்து ஒரு கனம் நினைத்துப் பாருங்கள். ஆனால், இப்போது உங்கள் வயது 50-ஐ நெருங்குகிறது அல்லவா. இந்த சமயத்தில் உடலின் மெடபாலிசம் மெல்ல குறைய தொடங்குகிறது. அதேபோன்று உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியும் குறையத் தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக, 50 வயதாகும் சமயத்தில் பெண்கள் ஆரோக்கியமாக வாழ என்னதான் செய்ய வேண்டும்? நீங்கள் ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க விரும்பினால் முறையான உடற்பயிற்சி செய்வதுடன், உணவுப் பழக்கமும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
என்ன பரிந்துரைகள் தரப்படுகிறது? பொதுவாக ஒரு பெண்ணின் வயது, அவர்கள் உடற்பயிற்சி செய்யும் அளவு மற்றும் இதர உடல்நிலையை பொறுத்து ஒவ்வொருவருக்குமான பரிந்துரைகள் மாறுபடுகின்றன. அதே சமயம், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான பொது பரிந்துரைகளும் உண்டு என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ : உங்கள் சருமம் வறட்சி அடைவதை ஏதோ வயோதிகம் சார்ந்த பிரச்சனை என்று கருதி அலட்சியம் செய்து விடாதீர்கள். சருமத்தை இலகுவாக, மிருதுவாக வைத்துக் கொள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் மற்றும் முறையான நீர்ச்சத்து அவசியமாகும். வைட்டமின் டி சத்து கொண்ட பாதாம், பாலக்கீரை மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, ஊட்டி மிளகாய், தக்காளி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.