எந்த வயதிலும் ஒருவர் தனது உடலை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அவசியம். எல்லா நேரத்திலும் நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் இருந்து தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முடியாது. டயட்டை கடைப்பிடிக்கும் நபர்கள் தங்கள் உணவு உட்கொள்ளலில் இதையெல்லாம் சேர்க்க வேண்டும், இந்த உணவுகளை சேர்க்காமல் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என லிமிட் செட் செய்து கொள்கிறார்கள். ஆரோக்கியமான டயட்டை தாங்கள் கடைபிடிப்பதாக அவர்கள் நினைத்து கொண்டாலும், இது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
குறிப்பாக பெண்களின் உடல் வயது ஏறினாலும் சரியாக செயல்பட இரும்பு, கால்சியம், வைட்டமின் டி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் அவசியம். 40-களில் இருக்கும் பெண்கள் தங்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்காக டயட்டில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய சில முக்கிய ஊட்டச்சத்துக்களை பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா ஷேர் செய்து கொண்டுள்ளார். 40-களில் இருக்கும் பெண்களுக்கு குளிர்காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கீழே:
இரும்புச்சத்து : இரும்புச்சத்து வளர்ச்சி மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். 40-களில் இருக்கும் பெண்கள் இந்த காலகட்டத்தில் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். மேலும் இந்த காலம் பெரும்பாலான பெண்களுக்கு பெரிமெனோபாஸ் காலமாக இருக்கிறது. Perimenopause நிலை இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை அபாயத்துடன் தொடர்புடையது. எனவே 40-களில் இருக்கும் பெண்கள் தங்கள் டயட்டில் நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ், காய்கறிகள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்களை டயட்டில் சேர்ப்பதன் மூலம் போதுமான இரும்புச்சத்து பெறுவது அவசியம்.
புரோட்டீன் : தசைகளை வலுவாக வைத்திருக்க உதவும் புரோட்டீன் வயதாகும் போது தேவையான பேலன்ஸ் மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பராமரிக்க அவசியமானது. பொதுவாக பெண்கள் அதிகம் உட்கார்ந்திருப்பதையும், குறைவாக ஒர்கவுட் செய்வதையும் விரும்புகிறார்கள். இது சர்கோபீனியா எனப்படும் நேச்சுரல் ஏஜிங் ப்ராஸசை ஒருங்கிணைக்கிறது. எனவே போதுமான புரோட்டீனை பெற பீன்ஸ், பருப்பு போன்ற போதுமான புரோட்டீன் மூல உணவுகளையும், மில்க் காட்டேஜ் சீஸ் மற்றும் பிளெய்ன் யோகர்ட் போன்ற பால் பொருட்களையும் சாப்பிட பரிந்துரைக்கிறார் லோவ்னீத் பாத்ரா.
கால்சியம் : நம் எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம் குறிப்பாக 40 வயதிற்கு பிறகு மிகவும் அவசியமாகிறது. இதயம், தசைகள் மற்றும் நரம்புகள் சரியாக செயல்படவும் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்க பால், இலை காய்கறிகள், ராகி உள்ளிட்ட முழு உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி : 40 வயதிற்குப் பிறகு வயது தொடர்பான மாற்றங்களிலிருந்து பாதுகாக்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. உடலில் வைட்டமின் D குறைபாடுகள் இருந்தால் அது பல உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும். முக்கியமாக வைட்டமின் டி-யானது உடல் திறம்பட கால்சியத்தை உறிஞ்ச அவசியமானது. மஷ்ரூம்கள், முட்டை மஞ்சள் கரு, மீன், செறிவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் தானிய வகைகள் போன்றவற்றை டயட்டில் சேர்த்து கொள்வதோடு சூரிய ஒளியும் வைட்டமின் டி-இன் சிறந்த ஆதாரமாக உள்ளது.
வைட்டமின்ஸ் பி : வயதாவது நமது உறுப்புகளின் செயல்பாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே 40-களில் உள்ள பெண்கள் போதுமான பி வைட்டமின்கள் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்வது உடலின் செல்லுலார் மற்றும் உறுப்பு அமைப்பு செயல்முறைகளை சீராக இயங்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருப்பு வகைகள், இலைக் காய்கறிகள் மற்றும் பல முக்கிய ஆரோக்கிய உணவுகளில் வைட்டமின் பி நிறைந்துள்ளது.